வர்ணாசிரமமும் – அது கூறும் உலகம் தோன்றிய கதையும் – 2

938f84c478e24531d3e07661ce459ad9

புருசா என்பவனை வெட்டி பலியிட்ட பின் அவன் உடம்பிலிருந்து தோன்றியவற்றின் பட்டியலாக கீழே விவரிக்கப்படுகிறது

1- நெருப்பு – முதலில் நெருப்பு தோன்றுகிறது (இந்த நெருப்பில் யாகம் செய்து புருசாவை எரிக்கின்றனர்)
2- தயிரும் நெய்யும் தோன்றியது , அவன் உடம்பிலிருந்து வெளிவந்த நெய்யிலிருந்து காட்டு மிருகங்களும் , வீட்டு மிருகங்களும் தோன்றின.
3- நெருப்பில் பலியிட மிருகங்கள் தோன்றின.
4- பறவைகளும் , காட்டு மிருகங்களும் , வீட்டு மிருகங்களும் தோன்றின.
5- ரிக் வேதம் , சாம வேதம் , யசுர் வேதம் .
6- குதிரை , ஆடு போன்றவைகள் தோன்றின.
7- வெட்டப்பட்ட புருசா உடல் பாகத்திலிருந்து தோன்றியவைகள் :-

  • முகத்திலிருந்து பிறாமணர்கள் தோன்றினார்கள்.
  • கைகளிலிருந்து சத்ரியன் தோன்றினார்கள்.
  • தொடையிலிருந்து வைசியர்கள் தோன்றினார்கள்.
  • பாதத்திலிருந்து சூத்திரர்கள் தோன்றினார்கள்.

8- மனதிலிருந்து சந்திரன், கண்களிலிருந்து சூரியன், முகத்திலிருந்து இந்திரனும் நெருப்பும் தோன்றின. அவன் உயிலிருந்து காற்று , தொப்புளிலிந்து வானம், அவன் தலையிலிலிருந்து சொர்க்கமும் தோன்றியது.
9- பாதத்திலிருந்து பூமியும் தோன்றியது, அவன் காதுகலிருந்து திசைகள் தோன்றின. இப்படியாக உலகம் தோன்றியது.

இப்படி உலகத்தின் தோற்றத்தில் இவ்வளவு கற்பனையும் ஆபாசமும் கலந்திருப்பதை தான் தந்தைப்பெரியார் போன்றோர் சாடினார் , எதிர்த்தார்

நம் சிந்தனைக்கு

1- பாதத்திலிருந்து சூத்திரன் வந்தால் தீண்டாமை, பூமி வந்தால் புண்ணிய பூமியா?
2- புருசாவை பலியிடுவதற்கு முன் வானமும் இல்லை பூமியும் இல்லை அப்படியென்றால் தேவர்களும் முனிவர்களும் எங்கு வாழ்ந்தனர்?
3- இன்று உள்ள நம் இந்து மதக் கோயில்களில் இந்த புருசா என்று சொல்லுவதற்கான சிலைகள் உண்டா? அப்படி என்றால் கோயில்களை கட்டிய தமிழர்களுக்கும் ஆபாச கற்பனைகளை கூறும் வட ஆரிய வேத மதத்திற்கும் சம்பந்தம் உண்டா?
4- இந்த புருசா என்பவனை பற்றி , இந்த புருச சூக்தம் தவிர வேறு எங்கும், இவன் தான் முதலாக தோன்றினான் என்பதற்கான முகாந்திரம் இல்லை. அதாவது பொதுவாக பிறம்மா, விட்ணு , சிவா என்று தான் கூறுவார்கள்
5- இறைச்சி உண்ணுதல் தவறு என்றும் , பலியிட்டு பூசை செய்தல் தவறு என்று கூறும் வட ஆரிய வேத நெறியினர்கள் , இந்த உலகம் ஒரு மனிதனை பலியிட்ட பிறகே தோன்றியது என்று கூறுவது எப்படி தர்மமாகும்?
6- பலியிட்டு பூசை செய்ய கூடாது பாவம் , உயிரை கொல்லக்கூடாது என்று கூறுபவர்களின் வேதத்தில் ”நெருப்பில் பலியிட மிருகங்கள் தோன்றின” வருகிறது.