வர்ணாசிரமமும் – அது கூறும் உலகம் தோன்றிய கதையும் – 3

Purusha

வர்ணாசிரம தர்மத்தை கட்டிக்காத்த புருச சூக்தம் கூறும் கதைகளை பார்த்தோம்.  இனி பிறாமணர்களின் வெற்றி தொடர்வதன் காரணம் மற்றும் தமிழர்களின் தாழ்ச்சி நிலை தொடருதல், தாழ்ச்சி நிலையிலிருந்து விழிச்சி நிலைகளை பற்றி சில செய்திகளை பார்ப்போம்.

  • வானம், பூமி,அண்டப்பேரண்டம் இல்லாத காலத்தில் ஆயிரம் தலைகள், கால்கள், கைகள் கொண்ட புருஷ என்பவன் எங்கே இருந்திருப்பான்? நின்றிருப்பான்?
  • பிறாமணர்களில் சிலரும் , தமிழர்களில் பிறாமண விசுவாசிகள் பலரும் பிறம்மத்தை உணர்ந்தவன் தான் பிறாமணர் என்று ஒரு வாதத்தை முன் வைத்து மேற்கூறிய வர்ணாசிரம தர்ம கருத்து தவறு என்று வாதிடுகின்றனர். அது உண்மையெனில் இன்றுள்ள பிறாமண மடாதிபதிகள் தங்களுக்கு பிறகு அடுத்த தலைவர்களாக, இன்றைய நாட்டு நடப்பில் அடிமட்ட சாதியை சேர்ந்தவரை நியமிப்பாரா??? ஏற்றுகொள்வாரா????
  • சனாதன தர்மம் கூறும் வர்ணாசிரம தர்மத்தை பிறாமணர்கள் எப்படி காத்தனர் என்றால், புருஷ சூக்தத்தை சொல்லுபவர்க்கு அர்த்தம் புரிகிறதோ இல்லையோ சிறு வயதிலிருந்து பிறாமணர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு இதை  கற்றுக்கொடுக்கின்றனர். பரம்பரை பரம்பரையாக சொல்லப்பட்டதால் இந்த வர்ணாசிரமமும் நின்றது வென்றது.
  • பிறாமணர்கள் இந்த புருச சூக்தத்தை பெருமாலுக்கு உரியது, விட்ணுவிக்கு உரியது என்று தான் கற்று கொடுக்கின்றனர். அப்படி பார்த்தால் இது வரை எந்த இதிகாச புராணங்களிலும் பெருமாலை கொன்று தான் இந்த உலகம் தோன்றியது என்று கேட்டத்தில்லை!!!
  • பல பிறாமணர்களுக்கு நாம் வர்ணாசிரம தர்மத்தை கட்டிக்காக்க தான் இந்த புருஷ சூக்தத்தை கூறுகிறோம் என்றே தெரியாது.
  • பிறாமணர்களை பொருத்தவரை பிறாமணர்கள் அல்லாதவர்கள் அனைவருமே சூத்திரர்கள் தான்.
  • வர்ணாசிரம தர்மத்தை கட்டிக்காக்க வேதத்தில் இருக்கிறது என்றும் கீதையில் இருக்கிறது என்றும் கூறிக்கொள்ளும் பிறாமணர்கள். கீதையின் நாயகனான கண்ணன் தன்னையே சூத்திரன் என்று சொல்லியிருப்பாரா?
  • பிறாமணரல்லாதவர்களான இராமனையும், கண்ணனையும் இன்ன பலரையும் (சூத்திரர்கள்ளான) கடவுளர்களை வழிபடுவதன் நோக்கம் என்ன? இதனால் இவர்கள் அடைந்த சுக வாழ்வு என்ன? போன்றவற்றை ஆராய்ந்தால் பெரியாரின் பிறாமண எதிர்ப்பு , மறுப்பு போன்றவை நம்மால் உணர முடியும்!!!
  • தமிழர்கள் தாங்கள் செய்யும் தொழிலின் அடிப்படையில் ஏற்பட்ட பெயர்களையே சாதி பெயர்களாக்கி, தமிழர்களுக்குள் ஏற்றத்தாழ்வையும், சாதி சண்டையையும் மூள விட்டு அந்த நெருப்பில் குளிர் காயும் கயவர்கள் தான் வர்ணாசிரமத்தையும் ,சாதிகளையும் வாழச் செய்கின்றனர்.

உண்மையிலேயே வர்ணாசிரம பிரிவுகளை ஒழிக்க நினைப்பவர்கள், கோயில்களிலோ பொது இடங்களிலோ பிறாமணர்கள் செய்கின்ற பூசைகளில் புருச சூக்தத்தை ஓதினால் அவர்களிடம் மேற்கூறிய ஆதாரத்தோடு பேசி அவர்களை திருத்தும் முயற்சியில் ஈடுபட்டாலே போதும்.

அதே போன்று தமிழர்களுக்குள் இருக்கும் சாதிப் பிரிவிகளின் கொடுமையை ஒழிப்பதற்கும் நாம் ஏன் நம் நாட்டிலேயே மூன்றாம் குடியினராக உள்ளோம் என்பதை ஆராய்ந்து உணர்ந்தால்!!!, தமிழ் நாட்டு மக்கள் பேசுகின்ற மொழியின் அடிப்படையில் ஒரே இனம் என்ற ஒற்றுமையோடு வாழ வழிச்செய்யும்.

மேலும் படித்துணர குருதேவர் ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்களின் எழுத்துக்களை படிக்க இங்கே சொடுக்கவும் http://www.gurudevar.org/12thpeedam/gurudevar_on_caste.html

 

3 thoughts on “வர்ணாசிரமமும் – அது கூறும் உலகம் தோன்றிய கதையும் – 3

  1. வேத இலக்கியமான புருஷசூக்தம் என்பது சொல்வதாக சிலர் சொல்வது பகவானின் ஒவ்வொரு அங்கங்களிலிருந்தும் 4 வர்ணங்களும் வந்ததாக சொல்லுவார்கள். அதில், சூத்திரர்களை தான் பெரிதாக சொல்வது, ஏனெனில் இவர்கள் பகவானின் காலிலிருந்து வந்ததாக சொல்வதால்தான். அதன் உண்மை என்ன என்பதை பார்க்கலாம்…

    வேதஇலக்கியங்களில்சொல்வது, அவர் தலையிலிருந்து பிராமணர்களையும், மார்பிலிருந்து சத்திரியர்களையும், இடுப்பிலிருந்து வைஷ்யர்களையும், காலிலிருந்து சூத்திரர்களையும் எனகூறுகிறது புருஷசூக்தம். ஆனால், இது ஒரு உவமைக்காக தான்.

    அதாவது, ஒரு மனிதனுக்கு முக்கியம் தலை, அதுபோல் ஒரு சமுதாயத்திற்கு முக்கியமானவர்கள் அறிவாளியான பிராமணர்கள். எனவே தான் பிராமணர்களை ஒரு உவமைக்காக தலையிலிருந்து வந்ததாக சொல்கிறது. அது போலவே பிற வர்ணங்களும். ஆனால், ஒரு மனிதனுக்கு தலை, மார்பு, இடுப்பு, கால் இவைகள் அனைத்துமே தேவையானதே. இதில் ஒன்று குறைந்தால் கூட கஷ்டமே தான். இதில் எந்த வர்ணமும் உயர்ந்தது, தாழ்ந்தது இல்லை. ஒரு மனிதனுக்கு இவைகள் எல்லாமே எப்படி முக்கியமோ, அது போலவே இந்த சமுதாயத்திற்கு இந்த நான்கு வர்ணங்களும் தேவையே. இதுவே ஆரோக்யமான சமுதாயம். இது போலவே ஒருமனிதனுக்குஎல்லாஉறுப்புக்களும்முக்கியமானதேஆகும்.

    உண்மையான அர்த்தம்யாதெனில்,

    பிராமனணுக்கு முகமே பலம்.ஏனெனில் வேதம் ஓதும் பிராமணன் முகலட்சணத்தோடு விளங்க வேண்டும்.மேலும் வாயால் நல்லாசி வழங்கவும், நல்உபதேசம் செய்யவும், நல்மந்திரம் உச்சாடனம்செய்யவும் முகமே துணை.எனவே பிராமணணுக்கு முகபலம் தேவை.

    #ஷத்திரியன் தோளில் பிறந்தான் என்பது, சத்திரியனுக்கு தோள்பலம் தேவை.ஏனெனில் சத்திரியன் வாள் கொண்டு எதிரிகளிடம் இருந்து மக்களை காப்பாற்றவும், பாதுகாக்கவும் வறியவர்களுக்கு கொடை அளித்து ஆதரிக்கவும் தோள் பலம் கொண்ட கரங்கள் தேவை.

    #அதே போல் வைசியன் இடுப்பில் பிறந்தான் என்பது, வைசியன் உட்கார்ந்த நிலையில் வியாபாரம் செய்பவன். எனவே வியாபாரம் செய்யவும், கணக்கு வழக்குகளை பார்க்கவும் வைசியனுக்கு தொடை பலம் மிக்கதாக விளங்கவேண்டும்.

    #அதேபோல் சூத்திரன் காலில் பிறந்தான் என்பது,. சூத்திரன் உழவு செய்பவன் .உழவு செய்பபவனுக்கு கால் பலம் தேவை. கால்கள் பலமாக இருந்தால் தான் பயிரிடவும் பராமரிக்கவும் முடியும். இவ்வாறு புருஷசூக்தம் கூறும் அர்த்தம் வேறு.

    இப்படிஒருஉவமைக்காகசொல்லப்பட்டதேஇவைகள்.

    மேலும், பகவத்கீதை மூலம் நாம் அறிவது …

    ‘அடக்கமுள்ள பண்டிதர்கள் தங்களது உண்மை ஞானத்தின் வாயிலாக, கற்றறிந்த தன்னடக்கமுள்ள பிராமணன், பசு, யானை, நாய், நாயைத் தின்பவன் என அனைவரையும் சம நோக்கில் காண்கின்றனர்.- பகவத்கீதா – 5-18

    மேலும், சனாதன தர்ம வேத இலக்கியங்களில் கூறுவது ….

    ஸத்கர்ம-திபுனோவிப்ரோமந்த்ர-தந்த்ர-விஷாரத:
    அவைஷ்ணவோகுருர்நஸ்யாத்வைஷ்ணவ: ஷ்வ-பசோகுரு:

    ‘வேத அறிவின் எல்லாம் அறிந்தவனாக பிராமணன், வைஷ்ணவனாக இல்லாவிடில் (கிருஷ்ணா உணர்வு தத்துவத்தை அறியாவிடில்) அவன் குருவாக இருக்க தகுதியத்தவனே. ஆனால், கிருஷ்ண உணர்வுடன் வைஷ்ணவனாக இருக்கும் எவரும், இழிகுலத்தில் பிறந்திருந்தாலும் அவன் ஆன்மீககுருவாகஆகலாம்’

    மனித சமுதாயம் மிருக சமுதாயத்தைப் போன்றதே; ஆனால், மிருக நிலையிலிருந்து மனிதரை உயர்த்தி, அவர்களிடம் கிருஷ்ண உணர்வை முறையாக வளர்ப்பதற்காக, மேற்கூறிய பிரிவுகள் பகவானால் படைக்கப்ட்டுள்ளன. ஒரு குறிப்பிட்ட செயலைச் செய்வதில் மனிதனுக்கு இருக்கும் நாட்டம், அவன் பெற்றுள்ள ஜட இயற்கையின் குணத்தை பொறுத்தது. குணங்களுக்கேற்ப செய்யப்படும் செயல்களின் அறிகுறிகள்.

    ஒரு குறிப்பிட்ட தொழில் முழுமுதற்கடவுளின் திருப்திக்காக செய்யப்படும் பொழுது, அதிலுள்ள எல்லா குற்றங்களும் தூய்மையடைகின்றன. செயலின்பலன்கள் தூய்மைப்படுத்தப்பட்டு, அவை பக்தித் தொண்டுடன் இணைக்கப்படும் பொழுது, ஒருவன் உள்ளிருக்கும் ஆத்மாவைக் காண்பதில் பக்குவமடைகின்றான்,

    இதுவே தன்னுணர்வு எனப்படுகிறது.

    Like

    1. பெரிய விளக்கத்திற்கு நன்றி

      இந்த விளக்கத்தை கூறி காஞ்சி மடத்திலோ அல்லது பிறாமண குலத்திலோ எனக்கு தெரிந்த பிறப்பால் சூத்திரனும் வளர்ப்பால் பிறாமணனாக வளர்ந்தவரை மடத்திலோ அல்லது விவாக பந்தத்தில் கொண்டு செல்ல முடியுமா???

      Like

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.