காஞ்சி மடமும் தமிழின விரோதமும்

https://mahaperiyavaa.blog/ தென்னாடுடைய பெரியவா போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி சர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம் மாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி! இந்த வரிகளை கண்டவுடன் பிறாமணர்கள் மீது வந்த கோபத்தைவிட தமிழர்களின் ஏமாளித்தனமே  மிகவும் வருத்தத்தையும் கோபத்தையும் அளித்தது. தமிழை நீச பாசை என்று கூறியவனுக்கும், தமிழனாகிய ஆதிசங்கரனின் வரலாற்றை திரித்தவனுக்கும், வர்ண தர்மத்தை ஆதரித்தவனுக்கும் இப்படிப்பட்ட வரிகளை அவன் இனத்தவர்கள் எழுதியதை கண்டிப்பதோடு இல்லாமல் எழுதியவன் கையையே வினைப்பயனாக பெற்றிருக்கவேண்டும் ஆனால் தன் மொழி இலக்கியங்கள் … Continue reading காஞ்சி மடமும் தமிழின விரோதமும்

வர்ணாசிரமமும் – அது கூறும் உலகம் தோன்றிய கதையும் – 3

வர்ணாசிரம தர்மத்தை கட்டிக்காத்த புருச சூக்தம் கூறும் கதைகளை பார்த்தோம்.  இனி பிறாமணர்களின் வெற்றி தொடர்வதன் காரணம் மற்றும் தமிழர்களின் தாழ்ச்சி நிலை தொடருதல், தாழ்ச்சி நிலையிலிருந்து விழிச்சி நிலைகளை பற்றி சில செய்திகளை பார்ப்போம். வானம், பூமி,அண்டப்பேரண்டம் இல்லாத காலத்தில் ஆயிரம் தலைகள், கால்கள், கைகள் கொண்ட புருஷ என்பவன் எங்கே இருந்திருப்பான்? நின்றிருப்பான்? பிறாமணர்களில் சிலரும் , தமிழர்களில் பிறாமண விசுவாசிகள் பலரும் பிறம்மத்தை உணர்ந்தவன் தான் பிறாமணர் என்று ஒரு வாதத்தை முன் வைத்து … Continue reading வர்ணாசிரமமும் – அது கூறும் உலகம் தோன்றிய கதையும் – 3

வர்ணாசிரமமும் – அது கூறும் உலகம் தோன்றிய கதையும் – 1

இன்று வரை வர்ணாசிரம தர்மத்தை அடிப்படையாக கொண்டு மனிதர்களை நான்கு வர்ணங்களாக பிரித்தாண்ட ஹிந்து மதம். அதற்கு ஆதாரமாக கூறும் ரிக் வேதக் கதைகளை இந்த பதிவிலும் அடுத்த பதிவிலும் பார்ப்போம் பிறாமணர்கள் பலரும் ஒப்பிக்கும் (சொல்லுகின்ற ஒருவருக்கும் அர்த்தம் தெரியாமல் தான்) புருச சூக்தம் என்னும் பகுதி ரிக் வேதத்தில் ”புருசா” 90வது அத்தியாத்தில் உள்ளது. அதில் கூறும் வரிகளின் விளக்கதையும் காண்போம். இதை கண்மூடித்தனமான பிறாமண எதிர்ப்பாக பார்க்காமல் இதனை பகுத்தறிவு கொண்டும், இந்த … Continue reading வர்ணாசிரமமும் – அது கூறும் உலகம் தோன்றிய கதையும் – 1

தமிழனுக்கு இன்னும் தாழ்ச்சி ஏன்?

தமிழனின் புத்தாண்டில் இரு வேறுபட்ட நாட்கள் ஏன்? தையா? அல்லது சித்திரையா? என்று ஒரு குழப்பம், ஒரு தெளிவற்ற நிலை. தமிழனின் கடவுளிள் இரு வேறுபட்ட வகைகள், இறைச்சி விரும்பும் கடவுளர்கள் , இறைச்சி விரும்பாத கடவுளர்கள் என்ற குழப்பம். வாழும் வரை தமிழில் மட்டுமே பேசியவராக இருந்தாலும் அவர் இறந்த பின் சமசுகிருத மொழியில் மந்திரங்கள் ஏன்? தமிழ் நாட்டில் கோயிலை கட்ட தமிழ் மன்னர்கள் வேண்டும், ஆனால் அந்த கோயிலில் வருணாசிரம தர்மம் பேசி … Continue reading தமிழனுக்கு இன்னும் தாழ்ச்சி ஏன்?

பகுத்தறிவாளனின் விவாதம் -1 : கடவுளை பார்க்கலாமா!!!

இன்றைய மதவாதி– வாரும் பகுத்தறிவாளரே! எங்கே இந்த பக்கம்? பகுத்தறிவாளன்:- கோயிலும் சாமியும் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம் என்று வந்தேன். இன்றைய மதவாதி:- கோயிலை பார்க்கலாம், சாமியை எப்படி பார்ப்பீர்கள், ஒரு வேளை கடவுள் சிலையை கூறுகிறீர்களோ? பகுத்தறிவாளன்:- என்ன கோயிலில் சாமி இல்லையா? இன்றைய மதவாதி:- என்ன பகுத்தறிவாளரே பரிகாசம் செய்கிறீர்களா? நாத்தீகம் பேசுகிறீர்களா? சாமியை பார்க்க முடியாது, உணரத்தான் முடியும் கண்டவர் விண்டதில்லை! விண்டவர் கண்டதில்லை, கேள்வி பட்டதில்லையா? பகுத்தறிவாளன்:- நீங்கள் தான் … Continue reading பகுத்தறிவாளனின் விவாதம் -1 : கடவுளை பார்க்கலாமா!!!

தந்தைப் பெரியாரும் தமிழின எழிச்சியும் – 4

தந்தைப் பெரியாருக்கு முன், தந்தைப் பெரியாருக்கு பின் என்ற இரண்டு நிலைகளை நாம் ஆராய்வோம். இதனை படிப்பவர்களும் உங்களின் வீட்டிலோ வட்டாரத்திலோ உள்ள முதியோர்களிடம் கேளுங்கள், இன்றைய சுதந்திர காற்றின் விலை என்ன என்று புரியும் தந்தைப் பெரியாரின் புரட்சியால் தமிழர் கோயில் மற்றும் மதத்திற்கு  ஏற்பட்ட சீர்திருத்தம் குத்தூசி குருசாமியின் “கல்மாடும் கல்நெஞ்சும்” என்ற புத்தகத்தில் -  7-8-1950 ஆம் ஆண்டு கும்பக்கோணம் கும்பேசுவரன் கோயிலில் உள்ள வெளிபுற நந்தியை நெ.பெரியசாமி என்பவர் தொட்டதால் அங்குள்ள அக்கிரகாரத்து … Continue reading தந்தைப் பெரியாரும் தமிழின எழிச்சியும் – 4

தந்தைப் பெரியாரும் தமிழின எழிச்சியும் – 2

கீழே கொடுக்கப்பட்டுள்ள கட்டுரை தந்தைப் பெரியாரின் குடி அரசு இதழில் 7-03-1926 வெளியானது. கட்டுரை சற்று பெரிதாக இருந்தாலும் இதில் உள்ள கருத்துக்கள் ஒவ்வொரு தமிழர்களுக்கும் 1926 தமிழகத்தின் நிலை எப்படியிருந்தது இன்று எப்படி இருக்கிறது என்று ஆராய்ந்து பார்க்க உதவும். கடைசி தமிழன் இருக்கும் வரை தந்தைப் பெரியாரின் தமிழின எழிச்சியும் புரட்சியும் நிலைத்து நிற்கும் என்பதில் சந்தேகம் இல்லை குறிப்பு:- கட்டுரையை அப்படியே பகிர்ந்துள்ளேன்.   சமஸ்கிருதம் நமது நாட்டில் சமஸ்கிருத பாஷைக்காக எவ்வளவு லக்ஷம் … Continue reading தந்தைப் பெரியாரும் தமிழின எழிச்சியும் – 2

ஆத்திகன் எப்பொழுதுமே ஆத்திகனா?

 கீழே கொடுக்கப்பட்ட உரையாடல் தந்தை பெரியாரால் எழுதிய நூல்களில் ஒன்றான சித்திரபுத்திரன் விவாதங்கள் என்ற ஒரு புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது பகுத்தறிவாளர்: மதங்கள் யாரால் உண்டாக்கப்பட்டவை? ஆத்திகன் : மதங்கள் கடவுளால் உண்டாக்கப்பட்டவை பகுத்தறிவாளர்: அல்ல-அவை மனிதர்களால் உண்டாகியவை ஆத்திகன் : ஏன் அப்படிச் சொல்லுகிறாய்? பகுத்தறிவாளர் : சொல்லுகிறேன் கேள். மதங்கள் எத்தனை உண்டு? ஆத்திகன் : பல மதங்கள் உண்டு பகுத்தறிவாளர் : உதாரணமாகச் சில சொல்லும் ஆத்திகன் : எடுத்துக்காட்டாக இந்து மதம், புத்த … Continue reading ஆத்திகன் எப்பொழுதுமே ஆத்திகனா?

இந்துவேதம், இந்துவேத மதமான இந்துமதம் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள் – பாகம் 2

 குருதேவர் அவர்களின் எழுத்துகளிலிருந்து எடுக்கப்பட்டது தமிழ்மொழியின் மூலம்தான் கடவுளர்கள் நேரில் வரவழைக்கப் படுகிறார்கள். மனிதர்களாகப் பிறப்பெடுக்கும்படிச் செய்யப் படுகிறார்கள், மனிதர்களைச் சந்திக்கும்படி செய்யப்படுகிறார்கள், மனிதர்கள் தாங்கள் விரும்பும் கடவுளர்களைச் சந்திக்கிறார்கள், மனிதர்கள் கடவுளர்களாகவே மாறுகிறார்கள். இதன் சான்றாக வாந்தவர்களே 63 நாயன்மார்கள் 12 ஆழ்வார்கள் 96 தொகையடியார்கள், இராமலிங்க அடிகள் பட்டினத்தார் போன்றோர் தமிழ்மொழியில்தான் மனிதனைக் கடவுளாக்கும் பூசைமொழி இருக்கின்றது.  தமிழில் தான் மந்தரம், மந்திரம், மந்திறம், மாந்தரம், மாந்தரீகம் என்று இருக்கிறது தமிழ் எழுத்துக்கு அருளாற்றல் விளைவித்துத் … Continue reading இந்துவேதம், இந்துவேத மதமான இந்துமதம் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள் – பாகம் 2

இந்துவேதம், இந்துவேத மதமான இந்துமதம் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள் – பாகம் 1

 குருதேவர் அவர்களின் எழுத்துகளிலிருந்து எடுக்கப்பட்டது மெய்யான இந்து மதத்தில் முதலாளித்துவமும், மடமையும், ஏமாற்றும், சுரண்டலும், பொய்யும், புளுகும், ஆபாசமும் கலந்து உருவாக்கப்பட்ட கலப்பட மதம்தான் இன்று நாட்டு வழக்கில் கூறப்படும் ஹிந்துமதம். இதன் தலைவர்கள் பிறாமணர்களே; இதன் மொழி சமசுக்கிருதமே; இதன் ஆயுள் மூவாயிரமாண்டுகளே. ஆனால், மெய்யான இந்துமதத் தலைவர்கள் தமிழர்களே; இதன் மொழி அருளூறு அமுதத் தமிழ்மொழியே; இதன் ஆயுள் 43,73,114 (கி.பி.2013இல்) ஆண்டுகள் இம்மண்ணுலகில் பெற்றுள்ளது. [இது பல நூறாயிரம் கோடி ஆண்டுகளாக விண்வெளி … Continue reading இந்துவேதம், இந்துவேத மதமான இந்துமதம் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள் – பாகம் 1