அமர் சித்ர கதா கூறும் தஞ்சைப் பெரிய கோயில் கதை

THANJAVUR_0__3.1432739926

தஞ்சை என்றவுடன் ”விண்ணுயர்ந்த கோபுரம் கொண்ட பெரிய கோயில்” என்றும் கற்கோயில் என்றும் ”கருவறை கோபுரம் கொண்ட கோயில்” என்றும் நமக்கு தோன்றும். அதே போன்று கருவறை கோபுரத்துக்கு மேலுள்ள ஒற்றை கல்லை எப்படி வைத்தனர் என்றும் வியந்து உலகமே பார்க்கும் பொழுது.

அமர் சித்ர கதா (Amar chitra Katha) என்னும் குழந்தைகளுக்கான புத்தகத்தில் (அம்புலிமாமா போன்று) தஞ்சை கோயிலின் வரலாற்றை மிகவும் கொச்சைப்படுத்தியும், அருவெறுக்கும் தன்மையுடனும் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கின்றனர். அந்த புத்தகத்தில் உள்ள செய்தி பின் வருமாறு.

பிருஹதீஸ்வர மகாத்மியம் என்ற சமசுகிருத புத்தகத்தின் சாரம்

அருள் மொழி தேவன் எனும் இராசராச சோழன் சேர நாடு, இலங்கை போன்ற நாடுகளை வென்ற பிறகு இராசராசன் நோய்வாய்பட்டான் அதுவும் அவனுக்கு தொழுநோய் தாக்கியது. அந்த நோய் தீர பரிகாரமாக பெரிய கோபுரத்தை உடைய கோயிலை கட்டினால்தான் நோய் தீரும் என்று இராசராசினின் குரு ஹரிதத்தா கூறினார். அதே போன்று இராசராசனும் வேண்டியதால் அவன் நோய் தீர்ந்தது. அவன் வேண்டிய படியே இன்று விண்ணுயர நிற்கும் பெரிய கோயில் கட்டப்பட்டதாக சித்திரங்கள் வரையப்பட்டிருக்கிறது.

இன்றும் பெரிய கோயிலில் இராசராசன் தன்னுடையை குருவாகிய கருவூறாரின் முன் தலைவணங்கி நிற்பது போன்று ஒரு ஓவியம் உண்டு, அதே போன்று பெரிய கோயிலின் கோபுரத்திற்கு பின்புறம் இராசராசனின் குரு கருவூறாரின் சிறிய சன்னதியும் உண்டு, இப்படி தெளிவான சான்றுகள் இருக்கும்போதே ஹரிதத்தன் என்பவனை கற்பனையாக உருவாக்கி அவனின் வழிகாட்டுதலில்தான் பெரிய கோயில் கட்டப்பட்டது என்ற கற்பனையை விற்றுள்ளனர் இந்த குள்ளநரி கூட்டம்.

இது ஒரு பானை சோறு அல்ல, இதே போன்றுதான் தமிழ் மன்னர்களாகட்டும் , அருளாளர்களாகட்டும் அவர்களுக்கு அருவெறுப்பான நோய் ஏற்பட்டதாக கதை கட்டிவிடுகின்றனர் பின்னர் பிறாமணனின் அறிவுரை பெற்று திருந்தினர் அல்லது புகழ் பெற்றனர். உதாரணத்துக்கு அருணகிரிநாதர் உறங்கும் பொழுது அகிலாண்டேசுவரி அவர் வாயில் எச்சில் துப்பியதால் தான் அவர் பாட ஆரம்பித்தார் என்றும், அதே போன்று பிற்காலத்தில் பல பெண்களுடன் அவருக்கு தொடர்பு இருந்ததால் ஏற்பட்ட பெருநோயால் கோபுரத்திலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார் என்று கதை கூறுவர்.சுந்தரரை பற்றிய செய்திகளும் தஞ்சாவூர் பற்றிய அமர் சித்ர கதாவில் உள்ளது.

அமர் சித்ர கதையில் உள்ள, இராசராசனை பற்றிய கட்டுக்கதைகளை, ஆபாச செய்திகளை படித்த பிறகாவது தமிழ்வுணர்வு கொண்ட ஒவ்வொருவரும், அமர் சித்ர கதாவிற்கு தங்களின் கண்டனங்களையும், உரிய நடவடிக்கையை எடுக்க அழுத்தம் தரப்பட வேண்டும்.

பிருஹதீஸ்வர மகாத்மியம் என்ற நூல் எப்போது எழுதப்பட்டது என்ற வரலாறு இல்லை, மன்னர் மன்னர் அருள் மொழிதேவன் போன்றே முன்பு நடந்த அனைத்து நிகழ்வுகளிலும் தன்னுடையை கதையை புகுத்தி மேண்மையை நிலைநாட்ட துடிக்கிறது இந்த குள்ள நரிக்கூட்டம் என்பதனை தமிழர்கள் புரிந்து செயல்படவேண்டும்.

இசுலாமிய மன்னர்கள் போன்று ஐரோப்பியர்கள் இந்திய கருவூலங்களை ஆய்வு செய்யாமிலிருந்திருந்தால் தஞ்சைக் பெரிய கோயிலை தொழு நோய் பெற்றே கோயிலை கட்டினான் என்று வரலாறு பிருஹதீஸ்வர மகாத்மியத்தின் வாயிலாக நிலை நிறுத்தியிருப்பார்கள்.

பேசுகின்ற மொழியால் ஒரே இனத்தவன் என்ற உணர்வின்றி சாதியின் பெயராலும், மதத்தின் பெயராலும் அடித்து கொண்டு அழிந்து போவதால்தான் கூத்தாடிகள் நம்மை இருட்டடிப்பு செய்கின்றனர் என்பதை உணரும் காலம் பொருத்தே நமக்கு தன்மானமும் தன்னம்பிக்கையும் விழிச்சி பெறும்.

உலகத்திற்கே தனிமனித வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை, சமுதாய வாழ்க்கை,  அரசியல் வாழ்க்கை நீதிகளையும், அரசியல் நெறிகளையும், கலைகளையும், நாகரீகத்தையும் காலங்கள் தோறும் பலராலும் எழுதப்படும் ஒரு மொழியின் வரலாற்றை, இனத்தின் வரலாற்றை இருட்டடிப்பு செய்யும் நிலையில் நாம் வாழுகின்றோம்.

பெயருக்காக தமிழ் வாழ்க என்றும், தனிமனித ஆதாயத்திற்காகவும், அரசியல் ஆதாயத்திற்காகவும் தமிழை எத்தனை நாட்களுக்கு பயன்படுத்தப்போகின்றனரோ!!!. இன்றுள்ள பத்திரிகைகளும் தமிழுணர்வு, தமிழரின் மரியாதை பற்றி பாரா முகம் காட்டக்கூடிய நிலையில் தான் உள்ளது.

அமர் சித்ர கதாவில் வெளிவந்துள்ள புத்தகத்தின் பிறதி.

Thanjavur-Ack-1

Thanjavur-Ack-2

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.