ஐரோப்பியர்களின் சமசுகிருத மொழிபெயர்ப்பு ஓர் ஆய்வு

Ambedkar and Periyaar

பொதுவாக பிறாமண எதிர்ப்போ அல்லது சமசுகிருத மந்தரங்களின் பொருளை பற்றிய பதிவோ இட்டால் உடனே அதற்கு எதிராக கிளம்பும் முதல் எதிர்ப்பும் சப்பைக்கட்டும் நாத்திகன், அல்லது தி.க அல்லது பெரியார் அல்லது மிசனரிகளின் கையால் அல்லது தவறாக பொருள் கொண்டுவிட்டீர்கள் என்று கூப்பாடு போடுபவர்கள் கொஞ்சமில்லை. இது சரியா??? முந்தைய பதிவில் புருஷ சூக்தத்தின் பொருளை வெளியிட்டோம். அதற்கு மேலே சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகளும் சப்பைக்கட்டுகளும் தான் பாய்ந்தன. அவர்கள் குற்றம் சாட்டுவது சரியா???

புருஷ சூக்தத்திற்கு பொருளுரை எழுதியவர் :- The Hymns of the Rigveda , Translated by Ralph T. H. Griffith, 2nd edition, Kotagiri (Nilgiri) 1896. இவரை போன்ற பலரும், குறிப்பாக மக்களுக்கு மிகவும் பரிசயமான மாக்ஸ் முல்லர் (Max Muller) போன்றோரும் சமசுகிருத மொழிபெயர்ப்பில் முன்னின்றனர் இவர்களை தான் மிசனரிகள் என்று சாடுகிறார்கள்…

அதே போன்று பெரியாருக்கு மட்டுமல்ல , அம்பேத்கருக்கும் இன்றுள்ள சாதி கொடுமையை தட்டிக்கேட்ட,கேட்டுக்கொண்டிருகின்ற அனைவருக்கும் ஐரோபியர்கள் செய்த இந்த மொழி பெயர்ப்பு பணியே காரணம். பொதுவாக பிறாமணர்கள் பிறாமணரல்லாதவர்களுக்கு சமசுகிருத வேதம் கற்பித்ததாக ஆதாரமில்லை. முகலாயர்கள் இந்தியாவுக்குள் படையெடுத்து வந்த போது இங்குள்ள மதத்தை அறியவோ ஆராயவோ அவர்கள் விரும்பவில்லை ஆனால் ஐரோப்பியர்கள் மற்ற மதங்களை ஆராய விரும்பினர். ஆகையினால் பிறாமணர்கள்
ஐரோப்பியர்களுக்கு மகுடம் சூட்டி தன்னிடமிருந்த அனைத்து வேத புத்தகங்களையும் பெருமிதத்துடன் பகிர்ந்து கொண்டனர், அதுமட்டுமல்ல அவர்களுக்கு சமசுகிருதமும் கற்று தந்தனர். இதற்கு காரணம் புதிதாக ஆட்சிக்கு வந்தவருக்கு காவடி தூக்கினால் புதிய ஆட்சியில் முன்னிருந்த நிலை கிடைக்கும் என்பது தான். உதாரணமாக இந்தி மொழியை தமிழகத்துக்குள் கொண்டுவர முயன்ற பொழுது உடனே ஏற்றவர்கள் இவர்களே. இன்றும் சமசுகிருத தினிப்பில் இவர்களின் நிலை அனைவரும் அறிந்ததே.

இதே போன்று தீண்டாமை என்பது ஐரோப்பியர்களுக்கு முன் இருந்ததில்லை என்றும் ஐரோப்பியரின் பிரித்தாலும் சூழ்ச்சியாக தான் இன்றுள்ள சாதிப்பிறிவும் தீண்டாமையும் உள்ளதாக கூறுகிறார்கள். வரலாற்று அறிவோடு ஆராய்ந்தால் இந்த சாதிக்கொடுமை ஐரோப்பியர்கள், முகலாயர்கள் வரும்முன்னே இருந்த ஒன்று என்பதை சுலபமாக சொல்லலாம் (உதாரணமாக 63 நாயன்மார்களில் ஒருவர் நந்தனார்).

தன்னுடைய இலாபத்திற்காக பிறாமணரல்லாதவர்கள் படிக்கவே கூடாதென்றிருந்த இலக்கியங்களை ஐரோப்பியர்களுக்கு தாரைவார்த்ததால் பல நூற்றாண்டுகள் மறைத்து வைத்திருந்த சமசுகிருத இலக்கியங்கள் மொழிப்பெயர்க்கப்பட்டன. இந்த சமசுகிருத இலக்கியங்கள் தான் சாதிக்கொடுமைகளுக்கு வேராக இருந்ததென்பதற்கான ஆதாரம் பலருக்கும் கிடைத்தது.

புருஷ சூக்த விளக்கம் பற்றிய கேள்வி:- புருஷ சூக்த உருவகம் செய்தது தவறு என்றால், ஐரோப்பியர்கள் வடமொழி வேதத்தை சிலாகித்து புகழ்ந்து பேசிய நூல்களின் உருவகமும் தவறு என்று தாங்கள் கூற தயங்குவீர்களா??????

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.