இறைச்சியும் இறைமையும்

மகா பெரியவா புலித்தோலின் மீது அமர்ந்துள்ள காட்சி, புலித்தோல் சைவமா???

சமீபத்தில் நான் தெருவில் செல்லும் போது ஒருவர் என்னை தடுத்து நிறுத்தி தங்களை இறைச்சிக் கடையில் பார்த்திருக்கிறேன் தங்களின் தோற்றத்தின் அடிப்படையில் தாங்கள் ஒரு சிவ பத்தர் போன்று இருக்கிறீர்கள்.. ஆகையால் ஒரு சந்தேகத்திற்காக உங்கள் வழியைமறித்து உரையாடுகிறேன் என்றார்.

அதற்கு நான் இறைச்சியை வாங்கி வீட்டில் சமைத்து இறைவனுக்கு படைத்தே உண்ணுவேன். ஏனென்றால் ஆயுதம் ஏந்திய கடவுளர்கள் அனைவருமே இறைச்சி உண்ணும் பழக்கமுடையவர்களே! மேலும் வாழ்ந்து சமாதியானவர்களான  முன்னோர்களே நமது கடவுளர்கள்… அதனால் பரம்பரையாக உண்ணுபவர்கள் தங்கள் முன்னோர்களுக்கு வழிபாடு செய்யும் பொழ்து இறைச்சி படைத்து தான் வழிபடவேண்டும் என்றேன்.

உடனே அபச்சாரம் அபச்சாரம் என்று கூறி உயிரை கொல்லுவது பாவமில்லையா என்று வாதிட்டார். பிறாமணியத்தை அடிப்படையாக மேற்கோல் காட்டி இறைச்சியை தவிர்க்க கூறினார்.

அதற்கு நான் உயிரை கொள்வது பாவம் என்றால் புலி தோலிலோ மான் தோலிலோ (பிறாமணர்கள் மான் தோலை பூநூலில் அணிவது வழக்கம்) அல்லது மற்ற உயிரினங்களின் உடல் பாகத்தை கோயில்களிலோ அல்லது சாமியார்களோ பயன்படுத்தலாமா அது பாவமில்லையா என்றேன், பதில் இல்லை. அதே போன்று பிறாமணர்கள் செய்யும் யாகங்களில் பலி கொடுக்கும் வழக்கம் இன்றும் உள்ளது இதனை உங்கள் பெரியவாளே  (கசாப்புக் கடைக்குப் போவதில் ஏதோ நூற்றில் ஒரு பங்கு யாகத்தில் பலியானதற்கு “ஐயையோ அக்ரமம் பண்ணுகிறார்களே!”என்று புத்தர் அழுதார், வைதார். ‘லோக க்ஷேமார்த்தமாகச் சில சக்திகளைப் HgF பண்ணவே யஜ்ஞம்’என்று அவருக்குப் புரிய வைக்க அந்த நாளில் யாருமில்லை போலிருக்கிறது.) http://www.kamakoti.org/tamil/3dk158.htm யாகத்தில் பலி கொடுப்பதாக ஒப்புக்கொள்கிறார் அது போன்று 2007ல் நடந்த யாகத்தில் பலி கொடுக்கப்பட்டதை ஊடகங்களும் (https://groups.yahoo.com/neo/groups/akandabaratam/conversations/topics/30707)   ஒத்துக்கொள்கின்றன என்றவுடன் அவர் மௌனியாகிவிட்டார்

இறுதியில் அவரை விட்டு செல்லும் முன் ஒருவருக்கு என்ன உணவு கிடைக்கிறதோ அதனை அவர் இறைவனுக்கு நன்றி கூறி உண்வது தவறில்லை, இன்று பலரை உண்ணும் உணவால் அவர்களை குறைகூறி அவர்களுக்கும் தான் எதோ குற்றமிழைத்ததாக நினைத்து தன்னம்பிக்கையை இழந்து வாழ்கின்றனர்….. ஒருவரின் உணவு முறையை பழிப்பது மிகப்பெரிய பாவச்செயல் என்று கண்டித்து அநுப்பினேன்.

நாம் உண்ணும் உணவை கடவுளுக்கு படைத்துவிட்டு உண்ணுவது மிகச் சிறந்த பத்தி, முன்னோர் வழிபாடே இந்து மதம் அதன்படிபார்த்தால் இறைச்சி உண்ணும் நாம் நம் முன்னோர்களின் வழியிலேயே இன்று வரை இறைச்சியை உண்ணுகிறோம்… உண்ணும் உணவால் யாரையும் இழிக்காதே பழிக்காதே அது மிகக் கொடிய பாவங்களில் ஒன்று.

One thought on “இறைச்சியும் இறைமையும்

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.