சமசுகிருத திருமண மந்த்ரம்

மணமகளுக்கு மணமகன் தாலி கட்டுவதற்கு முன் சொல்லப்படும் ஒரு மந்த்ரம் ”சோம பிரதமோ விவிதே; கந்தர்வோ விவித உத்தரஹ; திரிதீயோ அக்னி; இஷ்டே! பதிஸ்தூரி யஸ்தே மனுஷ்யஜாஹ்!” என்பதன் பொருளாக

”நீ முதலில் சோமனுக்கு உரியவளாக இருந்தாய், பின்பு கந்தர்வன் உன்னை அடைந்தான், பின்பு அக்கினி உன்னை அடைந்தான். இப்பொழுது நான்காவதாக ஒரு மானிடனை அடைகிறாய்.” இதுதான் இந்த மந்திரத்தின் அர்த்தம் கூறும் ஒரு தரப்பினரும்

ஆனால் சமசுகிருதத்தை ஆதரிப்பவர்கள் முதலில் சோமனும், பிறகு கந்தர்வன், பிறகு அக்னியும் பாதுகாத்தான் அவர்களுக்கு பிறகு இந்த மணமகன் உன்னை பாதுகாப்பான் என்பதாக பொருள் சொல்கிறார்கள்

இந்த மந்த்ரத்தின் பொருளை ஒட்டியே இப்பதிவு,

குறிப்பு- சமசுகிருத மொழி சொற்களின் பொருளை விளக்க () அடைப்புக்குறிக்குள் கொடுக்கபட்டுள்ளது

सोमो॑ ददद्गन्ध॒र्वाय॑ गन्ध॒र्वो द॑दद॒ग्नये॑ । र॒यिं च॑ पु॒त्राँश्चा॑दाद॒ग्निर्मह्य॒मथो॑ इ॒माम् ॥

सोमो ददद्गन्धर्वाय गन्धर्वो दददग्नये । रयिं च पुत्राँश्चादादग्निर्मह्यमथो इमाम् ॥ ரிக் வேதம் 10.85.41

सोम॑: प्रथ॒मो वि॑विदे गन्ध॒र्वो वि॑विद॒ उत्त॑रः । तृ॒तीयो॑ अ॒ग्निष्टे॒ पति॑स्तु॒रीय॑स्ते मनुष्य॒जाः ॥

सोमः प्रथमो विविदे गन्धर्वो विविद उत्तरः । तृतीयो अग्निष्टे पतिस्तुरीयस्ते मनुष्यजाः ॥ ரிக் வேதம் 10.85.42

இந்த வரிகளானது ரிக் வேதத்தின் 10.85.41 மற்றும் 10.85.42 வரிகளாக உள்ளது.

1- சோம (சோமன்) பிரதமோ ( முதலில்)   விவிதே;  (மணந்தான்)  கந்தர்வோ (கந்தர்வன் )  விவித (மணந்தான்)  உத்தரஹ (பின்னர்)

சோமன் முதலில் அப்பெண்ணை மணந்தான் பிறகு கந்தவர்வன் இரண்டாவதாகவும்

2- திரிதீயோ (மூன்றாவதாக) அக்னி; இஷ்டே (அக்னியிடம்)! பதிஸ்தூரி  யஸ்தே (நான்காவது கணவனாக உன்னை)   மனுஷ்யஜாஹ்! (மனிதனாக பிறந்தவன்)

 மூன்றாவதாக அக்னியும் நான்காவது மனிதனாக பிறந்த இந்த மானுடனை கணவனாக ஏற்கிறாள்

3- சோமோ  (சோமனுக்கு) ததாத்; (பிறகு)   கந்தர்வாய (கந்தர்வனும்);  கந்தர்வோ  (கந்தவர்னுக்கு )ததாத் (பிறகு) அக்னயே; (அக்னியும்)

சோமனுக்கு பிறகு கந்தர்வனும், கந்தவர்வனுக்கு பிறகு அக்னியும்

4- ரயிம் (தனம் சொத்து)  ச புத்ராம் (அதனோடு பிள்ளைகளும்) ஸ்சா, தாத் அக்னிர், மஹ்யமதோ இமாம்! (அக்னி அளித்தான்)

அக்னி அவளை பிள்ளைகள் மற்றும் செல்வத்தோடும் இந்த மானுடனுக்கு மணமளித்தான்

இந்த நான்கு வரிகளின் பொருளோடு தரப்பட்டுள்ளன, இவற்றையும் தவறு என்றும் சமசுகிருதத்தின் ஒவ்வொரு சொல்லுக்கும் பல பொருள் உண்டு ஆகையினால் உன் புரிதலின் தவறு என்று வீரவசனம் பேசுபவர்களுக்கு மேலும் ஒரு ஆதரத்தை வழங்கப்படுகிறது.

ஸ்மிருதி முக்தாபலம் என்ற நூல் 2010ல் வேத தர்ம சாஸ்திர பரிபாலன ஸபையின் சார்பில் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடம், ஸ்ரீமடம் ஸம்ஸ்தானம் வெளியிட்டது, இந்த நூலை இயற்றியவர் வைத்யநாத தீஷிதர். இப்புத்தகம் ஏழு பாகங்களைக் கொண்டது.

இப்புத்தகத்தில் பக்கம் 577ல் “கன்யாதான காலம்” எனும் பகுதியில் பெண்களுக்கு ஏன் பாலிய விவாகம் செய்யப்படவேண்டும் என்று தெளிவாக கொடுக்கபட்டுள்ளது. அதன் பகுதிகள் கீழ்வருமாறு

ஸம்வர்த்தர் கூறுவதாவது :- விவாஹமாகாத பெண் ரஜஸ்வலையானால் (பூப்படைந்தால்) தாய் தகப்பன் தமையன் இம்மூவர்களும் நரகத்தை அடைகின்றனர். கௌரியானவளைக் (எட்டு வயது பெண்) கொடுப்பவன், கன்னிகையை (பத்து வயது) கொடுப்பவன் ப்ரம்மலோகத்தையும் ரஜஸ்வலையை(பூப்படைந்த) கொடுப்பவன் ரௌவத்தையும் (நரகத்தையும்) அடைவான். ஆகையால் ருதுமதியாய் ஆவதற்குள் பெண்ணை விவாஹம் செய்து கொடுக்கவேண்டும். பெண்ணுக்கு எட்டாவது வயதில் விவாஹம் செய்வது ச்லாக்யமாகும் (சிறப்பு/பொருத்தம்). ரோமமுண்டாகும் (அந்தரங்க முடி) காலத்தில் சோமதேவனும், ரஜோதர்சன (பூப்படைதல்) காலத்தில் கந்தர்வனும், ஸ்தனங்களுண்டாகும் (மார்பகங்கள் வளர்வது) காலத்தில் பாவகனும் (அக்னியும்) கன்னிகையை அனுபவிக்கின்றனர்.

நாரதர் கூறுவதாவது :- விவாஹமாகாத பெண்ணுக்கு எவ்வளவு ருதுகாலங்கள் சென்றனவோ அவ்வளவு ப்ரம்மஹத்யைகள் அவளின் பிதாவை சேருகின்றன.

யாக்ஞவல்க்யர் கூறுவதாவது:- பெண்ணை விவாஹம் செய்து கொடுக்காத பிதாவானவன் ஒவ்வொரு ருதுவிலும் கர்ப்பஹத்யா தோஷத்தை அடைகிறான்

மேற்குறிப்பிட்ட சாஸ்திர விளக்கத்தின்படி பார்த்தால்,  இன்று இந்தியா முழுவதும் நடக்கும் பாலிய விவாகத்திற்கு விதையிட்டவர்கள் பிறாமணர்களே என்று புலனாகின்றது. அதாவது பெண் பூப்படைவதற்கு முன் திருமணம் நடைபெறாவிட்டால் தந்தைக்கு பல பாவங்களை நரகத்தை அடைவான் என்று சொல்லியுள்ளார்கள், அதுமட்டுமல்லாது அந்த உதிரத்தை பருகிய பாவமும் சேரும் என்று அருவெறுப்பையும் சொல்லியுள்ளார்கள் இந்த பிறாமணர்கள்.

இவற்றையெல்லாம் விட இரண்டு வயதுக்குள் பெண் குழந்தைக்கு திருமணம் முடிக்கலாம் அப்படி ஒரு வேளை அக்குழந்தை இறந்தால் அக்குழந்தைக்கு பெண்ணுக்குரிய மந்திரம் சொல்லி புதைக்காமல் எரிக்கவேண்டும் என்று காட்டுமிராண்டி சாஸ்திரத்தையும் எழுதியுள்ளனர் இந்த பிற மண்ணினர் எனும் பிறாமணர்.

ப்ரஜாபதி கூறுவதாவது:- இரண்டு வயது பூர்த்தி ஆவதற்குள் விவாஹமாகிய பெண் (குழந்தை என்று கூட எழுதவில்லை) மரித்தால் கனனம் (புதைக்க) செய்யக்கூடாது. மந்த்ரத்துடன் (தகன) ஸம்ஸ்காரத்தைச் செய்யவேண்டும்.

பாலிய விவாகமாக இருக்கட்டும் அல்லது சதி எனும் உடன்கட்டை ஏறுவதாக இருக்கட்டும் அனைத்தையும் பிறாமணர்களும் அவர்களால் புத்தி மழங்கடிக்கப்பட்ட மக்களாக இருக்கட்டும் எதிர்ப்பதற்கு காரணம் சாஸ்திரத்திலும் வேதத்திலும் சொல்லியிருப்பதே, ஆனால் பிறாமணர்களால் மூளை மழுங்கியவர்களுக்கு தாங்கள் ஏன் செய்கிறோம்?, செய்வதின் பொருள் என்ன? செய்யாமல் போனால் பலன் என்ன என்பதெல்லாம் தெரியாது, இந்த சாஸ்திரங்களையும் வேதத்தையும் கட்டிக்காக்கும் பிற + மண்ணினரும் அவர்களின் மடங்களுக்கும் அனைத்து காரண காரியங்களும் தெரியும் என்பதனை மக்கள் இனிமேலாவது தெரிந்து ஆரிய மாயையிலிந்து விலகி அவரவர் தாய் மொழியில் சடங்குகளை செய்து கொண்டு சுயமரியாதையோடு வாழ முயற்சிக்கலாம்.

தமிழகத்தை பொறுத்தவரை தமிழில் சடங்குகள் செய்துவைக்கும் அருட்கலையினர் பலர் உள்ளனர் மேற்கூறிய சமசுகிருத சாக்கடை தாங்கொனா நாற்றம் அடிக்கிறது என்று எண்ணுபவர் தன் தாய் மொழியில் பூசைகள் செய்ய வழிவகைகள் உள்ளன. தமிழில் உள்ள சமய இலக்கியங்கள் படித்து புரிய ஒரு ஆயுள் போதாது என்பதாக அள்ள அள்ள குறையாத அமுதமாக உள்ளது, தமிழெனும் அமுதத்தை விடுத்து நமது முன் உள்ள மனிதனை தாழ்த்தியும் அடக்கியும் பெண்ணை கொச்சைப்படுத்தியும்  பேசி அதனை நியாயப்படுத்தும் சமசுகிருதம் எனும் நஞ்சு நமக்கு தேவையா என்பதனை மக்கள் சிந்திக்க வேண்டும்

மேற்கூறிய சமசுகிருத சாக்கடை நாற்றமென எண்ணாதவர்கள் தூங்குபவர்களாக நடிப்பவர்களாகவே நினைத்து அவர்களின் நீள்துயிலை கலைக்க விரும்பவில்லை.

இன்றுள்ள அரசியல்வாதிகள் வர்ணாசிரம தர்ம புத்தகத்தை எரிப்போம் என்று போரிடுவதற்கு பதிலாக தங்கள் தொண்டர்களிடம் இனி தங்கள் தங்கள் வீட்டில் நடக்கும் சடங்குகள் அனைத்துமே தனது தாய்மொழியில் நடத்தப்படவேண்டும் எக்காரணம் கொண்டும் வீடுகளில் சமசுகிருதம் எனும் நஞ்சு ஒலிக்கக்கூடாது என்று கூறி வர்ணாசிரம தர்மத்தை விட அனைத்து சமசுகிருத வேத புத்தகங்களையும் எரிக்கும் போராட்டம் நடத்த முற்படவேண்டும்.

இந்துக்கள் கோயில்களில், பூசைகளில் சமசுகிருதத்தைப் பயன்படுத்துவது பெரிய பாவம், கொடிய தீட்டு, நெடிய சாபம்” தஞ்சைப் பெரிய கோயிலை கட்டிய சித்தரின் குருபாரம்பரிய வாசகம்.

இந்த குருபாரம்பரிய வாசகங்களை  தமிழர்கள் தங்களின் உள்ளங்களிலும், இல்லங்களிலும், தெருக்களிலும், இரண்டு பேருக்கு மேல் கூடுகின்ற எல்லாவகையான நிலையங்களிலும் எழுதி வைக்க வேண்டும் – என்று கருவூறார் வழிவந்த கண்டப்பக்கோட்டை சித்தர் ஏளனம்பட்டியார் அவர்கள் அறிவார்ந்த அருளுரை வழங்குகிறார்

தஞ்சைப் பெரிய கோயிலைக்கட்டிய சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறாரின் குருபாரம்பரிய பேரனாகிய பனிரண்டாவது பதினெண்சித்தர் பீடாதிபதி சித்தர் அரசயோகிக் கருவூறார் அருளிய அன்றாட பூசை மொழிகள் அருளியதை பயன்படுத்தி வழிபாடு மற்றும் சடங்கியலுக்காக அன்னிய மொழிக்கு அடிமையாவதை தவிர்ப்போம்.

தாயை பழித்தவனை யார் தடுத்தாலும் விடாதே,
தமிழை பழித்தவனை தாயே தடுத்தாலும் விடாதே…

தாயையும் தமிழையும் பழிப்பவனை என்ன செய்யவேண்டும் என்று தமிழர்கள் முடிவுகட்டட்டும்.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.