ஜெயேந்திர சரஸ்வதிக்கு கண்டனம்

 

shankracharya_police_20041213

இந்து மதக் கடவுளர்களை பற்றிய காஞ்சிபுரத்து ஜெயேந்திரனின் கருத்துக்கு கண்டனமும் விமர்சனமும் தெரிவிக்கும் விதமாக இந்தப்பதிவு

கற்பணையாக சரித்திரம் புணையப்பட்ட காஞ்சி மடத்தின் 69வது மடாதிபதியான ஜெயேந்திர சரஸ்வதி.  சிறையில் இருந்த போது எடுக்கப்பட்ட ஒலி ஒளி காட்சிகளில் சில ஆண்டுகளுக்கு பிறகு வெளியானது . அந்த காட்சியில் இந்து மதக் கடவுளர்கள் கொலைக்காரர்கள் என்ற கருத்து இடம் பெற்றுள்ளது.  அவரின் கருத்துக்கு எதிர்ப்பும் கண்டனமும் மெய்யான இந்துக்கள் சார்பாக வெளியிடப்படுகிறது. காஞ்சி மடத்து ஜெயேந்திர சரஸ்வதி உடனடியாக வருத்தத்தையும் மன்னிப்பையும் பொது மக்களிடம் கோர வேண்டுகிறோம்.

  1. ஒவ்வொரு ஆண்டு தீபாவளியின் போதும்/ மற்ற நன்னாளிலும் சில தொலைக்காட்சிகள் இந்த ஜெயேந்திரனை அழைத்து சொற்பொழிவாற்ற சொல்வார்கள். அப்போது கண்ணன் நரகாசுரனை கொன்றதால்தான் தீபாவளி (சம்காரம் செய்தார்) என்று போக்குகாட்டி மக்களுக்கு கதைகூறிவிட்டு. இப்போது தான் செய்த கொலையை இந்து மதக் கடவுளர்களோடு தன்னை ஒற்றுமைப்படுத்தி , கண்ணன் சிசுபாலன் கதையை சொல்லி சங்கரராமன் கொலையை நியாயப்படுத்த இவர்களுக்கு தகுதி உண்டா?
  2. இந்து மதக்கடவுளரெல்லாம் கையில் ஆயுதம் ஏந்தியவர்கள் இவர்கள் என்றுமே அகிம்சை என்று சொல்லப்படுகின்ற கொல்லாமையை கடைபிடித்ததில்லை, அதனால்தான் இன்றும் பிறாமணர்கள் நுழையாத முனீசுவரன், காளி, மாரி, கருப்பர் கோயில்களில் பலி கொடுக்கப்படுகிறது. அதாவது பிறாமணர்கள் எந்தெந்த கோயிலில் நுழைந்தனரோ அல்லது நுழைய விரும்பினரோ அந்தந்த கோயிலில் பலிகள் நிறுத்தப்பட்டு பின்னர் அந்தந்த கடவுளர்கள் சைவர்கள் என்று மாயாவாதத்தை உருவாக்கி மக்களை இருளில் ஆழ்த்தினர். ஆனால் தனக்கு பிறர்சினை என்றவுடன் இந்நாளில் பலிக்கொடுக்கப்படாத கடவுளர்களின் போர் குணத்தையும் அவர்கள் பல கொலைகள் செய்த குற்றவாளிகளென்றும் சொல்ல இவர்களுக்கு தகுதி உண்டா???
  3. இந்து மதக் கோயில்களை கட்ட அனைத்து சாத்திரத்தை தெரிந்த தமிழர்கள், பல துறைகளில் உலக மக்களுக்கு வழிகாட்டியாக இருந்த தமிழன், சமயத்துறையில் பல இலக்கியங்களையும் தோற்றுவித்த தமிழினம், வாழையடி வாழையாக பலப்பல அருளாளர்களையும் கொடுத்துக்கொண்டே உள்ள தமிழினம்,இப்படிப்பட்டவர்களிடம் பல கற்பனைகளையும் ஆபாச சிந்தனைகளையும் ஏற்படுத்தி மத அறிவற்றவர்களாகவும் , எந்த சந்தேகம் வந்தாலும் பிறாமணர்கள் காலில் விழச்செய்து பல முட்டாள்தனத்தை சாத்திரமாக எழுதியும் சொல்லியும் வாழ்ந்த இந்த வரலாற்று திரிப்பாளர்களுக்கு இந்து மதக்கடவுளர்களை பற்றி பேசத்தகுதியுள்ளதா??
  4. முன்னோர் வழிபாடும் மூத்தோர் வழி நடத்தலுமே இந்து மதம். மற்ற நாட்களில் இறைச்சியை விரும்பி உண்ணும் பழக்கத்தை கொண்ட மக்களை குழப்பி தமிழர்களுடைய முன்னோர்களான குல தெய்வத்திற்கு இறைச்சி உணவை தவிர்த்து மரக்கறி உணவை படைக்கும் வழக்கத்தை ஏற்படுத்தி கொல்லாமையே சிறந்தது என்று நாடகமாடி தான் செய்த கொலைக்கு தன்னை கண்ணனோடும் மற்ற கடவுளர்களோடும் ஒப்பிட்டு பேசி மக்களை மீண்டும் குழப்ப நினைக்கும் இவர்களுக்கு இந்து மதக் கடவுளர்களை விமர்சிக்க தகுதியுண்டா???
  5. இந்து மதக் கடவுளர்களுக்கு எதிராக வேறொருவர் பேசியிருந்தால் இன்று இந்து மதத்தை காக்கிறோம் என்று கூவித்திரியும் கூட்டம் ஒப்பாரி வைத்து அரசியல் ஈட்டத்தை நாடியிருப்பார்கள். சொன்னவன் ஜெயேந்திரன் என்ற பிறாமண குருமாராயிற்றே அவரை எதிர்க்க முடியுமா? அல்லது பிறாமணனை திட்டினால் பாவம் என்ற வர்ணாசிரம தர்மம் தடுக்கிறதோ???
  6. இதுகாலமும் இந்து மதத்தின் வரலாற்றிலும் ஆதிசங்கரனின் வரலாற்றிலும் ஏற்படுத்திய பல குழப்பங்களுக்கு முக்கிய காரணமாக விளங்கிய காஞ்சி மடம் இந்து மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டு இந்து மதக் கோயிலான காஞ்சி காமாட்சி கோயிலின் மேல் உள்ள உரிமையை தமிழர்களுக்கு கொடுக்கவும்.
  7. இராமனும், சிவனும், கண்ணனும் ஏனையோரும் கொலைகாரர்கள் என்றால் நீ ஏன் அவர்களை வணங்க வேண்டும்,அவர்களின் பெயரை சொல்லி வாழவேண்டும், அவர்களின் கோயில்களை ஆக்ரமிக்கவேண்டும். உன்னை வழிபடுவர்களில் மானமுள்ளவர்கள் சிந்தித்து முடிவெடுக்கட்டும் கொலைகாரகளை வணங்கவேண்டுமா அல்லது உன் மடத்தில் உள்ள நீச்சர்களை வணங்கவேண்டுமா

  இவன்

   மெய்யான இந்து மதத்தவன்

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.