ஆதிசங்கரரும் – சங்கரரும் ஒருவரா?

sankara2

சென்ற பதிப்பில் நாம் ஆதிசங்கரரும் அவரின் பெயரால் நிறுவிய மடங்களின் ஏமாற்றுகளை பற்றி பார்த்தோம். மேலும் சில ஆய்வு செய்திகளுடன் இந்த பதிப்பு தொடர்கிறது.

1- ஆதிசங்கரன் என்பவர் ஒருவரா? அல்லது பலரா? ஆதிசங்கரன் ஒரு தமிழரே!!!

    தென்பாண்டி தமிழன், உச்சி குடுமியான், வெள்ளாடை மேனியான், கருணீக்க வேளாளர் மரபில் பிறந்த சிவகுரு என்னும் சிவாச்சாரியாரின் மகன், காலடி ஆதிசங்கரன் , 32வது ஆதிசங்கரன் என்று போற்றப்படுகிறார்.

இவர் தான் ஒரு தமிழனே என்ற செய்தியை தான் எழுதிய சௌந்தர்ய இலகரி, 75வது பாடலில், தன்னை திராவிட சிசு என்றே குறிப்பிடுகின்றார். எந்த ஒரு பிறாமணனும் தன்னை திராவிடன் என்று கூறிக்கொள்ளமாட்டார்கள்.

தயாவத்யா தத்தம் த்ரவிடசிசு-ராஸ்வாத்ய தவ யத்
கவீனாம் ப்ரௌடானா-மஜனி கமனீய: கவயிதா ii 75

குறிப்பு 1:- இலகரி = இலாகிரி = மயக்கும் பொருள், மனதை இலகச்செய்யும் வல்லமையை கொண்டது. இலகரி என்பது ஒரு ஆழமான தமிழ் சொல்லே!!!

குறிப்பு 2:- திராவிடன் என்ற சொல் ஆங்கிலேயர் ஆட்சிக்கு பின் தான் உருவானதாக கருதும் மக்கள் அதிகம் என்பது இங்கே குறிப்பிடதக்கது.

2- ஆதிசங்கராசாரியாரும் சங்கராச்சாரியாரும் ஒருவரா?

இந்த பெயர் பலருக்கும் ஒன்று போலதான் தோன்றும்.

திருவள்ளுவரின் முதல் குறளில், ஆதி என்று சொல்லப்படுவது அம்மை அதாவது சத்தி (ஆதி பகவன் – அம்மையும் அப்பனும் , சத்தியும் சிவனும்)  . அதே போன்று ஆதிசங்கரன் என்பது சத்தி வழிபாட்டையும் சிவ வழிபாட்டையும் செய்பவர்களே ஆதிசங்கராச்சாரியார்.

ஆதிசங்கராச்சாரியாரை போன்றே  ஆதிசிவாச்சாரியார், ஆதிபரமாச்சாரியார், ஆதிஈசுவராச்சாரியார் என்ற பட்டியலும் உள்ளது.

சிவனை மட்டுமே வழிபடுபவர்களே சங்கராச்சாரியார், சிவாச்சாரியார், பரமாச்சாரியார், ஈசுவராச்சாரியார் போன்றவர்கள்.

எப்படி காலடியில் பிறந்த ஆதிசங்கராச்சாரியார் 32வது ஆதிசங்கராச்சாரியாரோ, அதே போன்று இதுவரை 40 சங்கராச்சாரியார்கள் தோன்றிவிட்டனர்.

ஆகையால் ஆதிசங்கராச்சாரியார் என்பவர்கள் வேறு சங்கராச்சாரியார்கள் என்பவர்கள் வேறு.

குறிப்பு :- கணக்கு தெரியாதவர்கள் வீட்டில் நித்தம் நித்தம் சண்டை என்பது போல்.

காலனா, அரையனா, போன்றவற்றிக்கு வேறுபாடு தெரியாதவர்கள் கூறும் கூற்றுத்தான் ஆதிசங்கரரும் சங்கரரும் ஒன்று என்ற குழப்பத்திற்கு காரணம். 

3- எல்லாமே பிறம்மம் என்று கூறிக்கொண்டு, அவர் நிறுவிய நான்கு மடங்களும் , நான்கு கோயில்களை மையமாக கொண்டு செயல் படுகிறது ஏன்?

மேலே ஆதியின் விளக்கம் படிபார்த்தால் ஆதிசங்கரரின் நான்கு மடங்களும் சத்தி வழிபாட்டின் சாரமாக நான்கு கோயில்களில் நிறுவப்பட்டிருக்கிறது என்பது விளக்கமாகிறது.

 

மேலும் விளக்கங்களுக்கு, பனிரெண்டாவது பதினெண்சித்தர் பீடாதிபதி,ஞாலகுரு சித்தர் , அரசயோகிக் கருவூறார் அவர்கள் ஆதிசங்கரனை பற்றி கூறும் தகவல்களை படித்து உணர்ந்திடுங்கள் http://www.gurudevar.org/adisankarar/sankarar_vs_adisankarar.html

குறிப்பு: பதிவிட்டுள்ள ஆதிசங்கரரின் படத்தில் அவர் புலிதோலில் அமர்ந்திருக்கிறார். புலால் உணவே சிறந்தது என்று கூறும் பிறாமணர்களும், மற்ற தமிழர்களும், புலி தோலில் அமர்வதின் நோக்கத்தையும் தங்களின் கொள்ளையையும் சிந்திக்க வேண்டும் என்ற வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.

தென்னாடுடைய சிவனே போற்றி!

என்னாட்டவருக்கும் இறைவா போற்றி!

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.