தமிழர்களின் கோயிலும் – இசை கருவிகளும்

nagara_2394876f

இந்தியா முழுவதும் உள்ள வின்னுயர்ந்த கோபுரங்களும் அதன் கலைகளும் தமிழர்களின் கலைபண்பின் எடுத்துக்காட்டு என்பதை பற்றி பலருக்கும் சந்தேகம் இல்லை. ஆனால் கோயில்களில் கலை பொருட்களோடு நிறுத்தி கொள்ளாமல் ஏன் அங்கே பூசைகள், திருவிழா, வீதி உலா , இசை கருவிகளின் அணிவகுப்பு, நடனகலையின் காட்சி,…. போன்ற நிகழ்வுகளும் தொன்றுதொட்டு செய்யப்படுகிறது.

கோயில் கட்டும் கலைகளுக்கும் தமிழர்களுக்கும் உள்ள தொடர்பு போல் மேற்குறிப்பிட்ட நிகழ்வுகளுக்கும் தமிழர்களுக்கும் தொடர்பு உள்ளதா? உள்ளதென்றால் அதன் காரணம் என்ன?

இராமேசுவரம் கோயிலில் உள்ள நகரா பற்றிய தகவல் – நகரா

இந்த பதிப்பில் கோயில்களில் இசைக்கருவிகள் பற்றி செய்தியை பார்ப்போம்.  இதில் முதன்மையாக நகரா என்ற இசைக் கருவி. இன்றும் பல கோயில்களில் நகரா மண்டபம் உள்ளது.

நகரா – கோயில் கருவறைகளில் உள்ள சத்திகள் வேறெங்கும் நகராமல் பாதுகாக்கப் படுகின்றன. இது ஒரு பொருளாழமிக்க தமிழ் சொல்லே!!!

பனிரென்டாவது பதினெண்சித்தர் பீடாதிபதி, ஆச்சாறிய குருபீடம், குருதேவர், ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்கள் அருளிய ”இந்துமத மறுமலர்ச்சித் திருவானை” என்ற நூலிலிருந்து ஒரு சில பகுதிகள்.

”எனவேதான், தமிழ்மொழிக்கு இறை அணுக்களை ஈர்க்கவும்; ஒன்று திரட்டவும்; ஒற்றுமைப் படுத்தவும்; ஆணையிட்டுச் செயல்படுத்தவும் பேராற்றல் இருக்கின்றது. அதனால்தான், “தமிழ்மொழியே கடவுள்”, “தமிழ்மொழியைப் பேசுவதே இறை வழிபாடு”, “தமிழர் நினைவே மறை”, “தமிழர் வாழ்வே முறை”, “தமிழே அமிழ்து”, “தமிழே இனிமை, இளமை, கனிவு, சுவை, நிலைபேறு, தவம், சித்தி”, ….. என்றெல்லாம் பதினெண்சித்தர்களின் நூல்களில் பாராட்டப் படுகின்றது.

இம்மண்ணுலகில் முதன்முதல் உயிரினம் தோன்றிய இடமே இளமுறியாக் கண்டம் எனப்படும் குமரிக்கண்டம். இங்கு தோன்றிய முதலினத்தைத்தான் தமிழினமாக மாற்றினார்கள் பதினெண்சித்தர்கள். இதற்குப் பிறகு உலகின் பல்வேறு பகுதிகளில் மனித இனங்கள் தோன்றின. அந்த இனங்களுக்கெல்லாம் தமிழினத்தின் மூலம் அனைத்து வகையான பண்பாடுகளையும் நாகரீகங்களையும் வழங்கினார்கள் பதினெண்சித்தர்கள். இந்துமதம் என்ற அழகிய பொருளாழமிக்க தமிழ்ச் சொல்லின் மூலமே தங்களுடைய சித்தர்நெறி எனும் “உயிர் மதத்”தை [சீவ மதம் = சிவ மதம் => சைவ மதம்] உலகுக்கு வழங்கினார்கள். எனவேதான், இந்த உலகில் தோன்றிய அனைத்து மதங்களிலும் வழிபாட்டில் நெருப்பு அல்லது விளக்கொளி முதன்மை பெறுவதோடு; பல்வேறு வகையான ஒலிக்குரிய இசைக் கருவிகளும் இடம் பெறுகின்றன. அதாவது, ஒலியும் ஒளியுமே பயிரினங்களையும் உயிரினங்களையும் ஒன்றாக்கி உய்வித்து உயர்வடையச் செய்கின்றன என்ற சித்தர் நெறித் தத்துவமே ஒளி வழிபாடாகவும் [Worship of Light Rays = அருட்பெருஞ்சோதி = குத்து விளக்குப் பூசை = மனை விளக்குப் பூசை = கார்த்திகை விளக்கு பூசை = மாலையில் மாட விளக்குப் பூசை = திருநாள்களில் கோபுர விளக்குப் பூசை….. ] ஒலி வழிபாடாகவும் [Worship of Sounds, இசைக் கருவிகளின் மூலம் வழிபடல்; வாய்ப்பாட்டின் மூலம் வழிபடல்; உரத்த குரலில் அழுது, புலம்பி, அரற்றி, வேண்டுகோள்களை வெளியிட்டுக் கும்பிட்டுப் பூசை செய்தல்; அருள் வாசகங்களைச் சொல்லித் தொழுகை செய்தல்; மந்திறங்களைச் சொல்லிப் பூசைகள் செய்தல்…..] எல்லா மதங்களுக்கும் கண்களாயின. இந்து மதத்தில் ஒவ்வொரு கோயில்களிலும் நகரா அல்லது முரசு அல்லது பறை அல்லது கிடுமுட்டி அல்லது கிண்ணாரம்…. எனப்படும் பேரொலி எழுப்பக் கூடிய தோல் கருவிகளைப் பயன்படுத்தி பேரொலி எழுப்பியே பூசையைச் செய்கின்ற முறை இருந்தது.

கி.மு.100 முதல் கி.பி.150 வரை இருந்த பத்தாவது பதினெண்சித்தர் பீடாதிபதி குருமகாசன்னிதானம் அமராவதி ஆற்றங்கரைக் கருவூறார் அவர்கள் “அருள் அணு ஊற்றுக்களையே கருவறைகளாக்கிப் பதினெண்சித்தர்கள் 48 வகையான வழிபாட்டு நிலையங்களைக் கட்டியிருக்கிறார்கள். இவற்றில் ஆறுகாலமும் அழுகை முறை, தொழுகை முறை, எள்ளல் முறை, ஏசல் முறை, வேண்டல் முறை, பாடுகிடத்தல் முறை என்று ஆறு வகையான வழிபாடுகளும் நகராக்களின் பேரொலியை எழுப்பி அந்தப் பேரொலியோடு நிறைவு பெறுகின்றன என்பதால்; கோயில் கருவறைகளில் உள்ள சத்திகள் வேறெங்கும் நகராமல் பாதுகாக்கப் படுகின்றன. நாடாளுபவர்கள் புதிய புதிய நகராக்களைத் தேவையான குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே செய்து இந்த வழிபாட்டு நிலையங்களுக்கு வழங்கி நகராக்களின் பேரொலி நின்று விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் பொருளாட்சி இருளாட்சி ஆகிவிடாமல் என்றென்றும் ஒளி மிகுந்திடும் அருளாட்சி ஆகிடும்.

நகரா ஒலி கருவறை மூலவர்களை வருவோர் அனைவருக்கும் அருளை வழங்கச் செய்யும். எனவே, நகரா ஒலிக்குப் பிறகே வழிபாட்டு நிலையங்களின் முதல் வாசல் கதவைத் திறக்க வேண்டும். இதற்காகத்தான் ஒவ்வொரு வழிபாட்டு நிலையத்தின் நுழைவு வாயிலின் மேல்தள மண்டபத்தில் நகரா மண்டபம் அமைப்பது ஆகமத்தில் வலியுறுத்தப் படுகிறது…. என்று குறிப்பதைப் பிற்காலச் சோழப் பேரரசர்கள் புரிந்து செயல்படாததால்தன் அவர்கள் கட்டிய ஆயிரக் கணக்கான கோயில்களும் அருளற்றுப் போயின….” – குருபாரம்பரிய வாசகம். பதினோராவது பதினெண்சித்தர் பீடாதிபதி குருமகாசன்னிதானம் சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் மகன் கருவூர்த் தேவர் [கி.பி. 1002 முதல் 1182 முடிய] அவர்கள் கடைசிக் காலத்தில் மனமுடைந்து எழுதிய வாசகங்கள் இவை.” …

… குருபாரம்பரியம் கூறும் கோயில் ஆகம விதிப்படி, “…. கோபுரத்தைக் கண்களால் காணவும் வலச் செவியில் [வலது புறக்காது] மணியோசையின் இனிமை ஒலி நுழையவும்; இடச் செவியில் நகராவின் அருட்சினைக் கனி ஒலி நுழையவும் மெய் மயிர் சிலிர்த்து, வெய்துயிர்த்து ஆனந்தக் கண்ணீர் உகுத்து ஆண்டவர்கள் அனைவரையும் வழிபட்டு மானுடம் உய்யவே இந்துமதத்தைப் பதினெண்சித்தர்கள் பூசையின் துணை கொண்டு; சரநூல், ஊசிமுறி, விரிச்சி, முத்துக்குறி, புள்நிமித்திகம், உடுக்கை, மருள், அருள், குரவை, வெறியாட்டு…. முதலியவைகளின் மூலம் கிடைக்கும் தத்துவங்களை வழியாக ஏற்று வழிபாட்டு நிலையங்களை அமைக்க வேண்டும்” – கருவூர்த் தேவர் வாசகம் [கி.பி. 1002 முதல் கி.பி. 1182 முடிய]. இவ்வாசகம் திருமாளிகைத் தேவர் [கி.பி.1041 முதல் கி.பி.1136 முடிய] திருப்பூவணத்தில் [கும்பகோணம் அருகில்] கூழாங்கற்களைக் கூழாகக் காய்ச்சி மிகப்பெரிய சிவலிங்கம் வார்த்து திருக்கோயில் கட்டியபோது அவரது தந்தை கருவூர்த் தேவர் அருளியது.

————————————————————————————

குறிப்பு:- தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய பதினோராவது பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறாரின் மகனே கருவூர்த் தேவர் ஆவார். திருமாளிகைத்தேவர் கருவூர் தேவரின் மகனாவார்.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.