பெண்களும் வர்ணாசிரமமும்

பதியப்பட்டுள்ள காணொலியில் பத்மா சுப்ரமணியம் அவர்கள் வர்ணாசிரம தர்மத்தையும் அதன் அவசியத்தையும் பற்றி பேசியிருப்பார். அந்த காணொலியின் விளைவே இப்பதிவு.

பத்மா சுப்ரமணியம்  தமிழ்நாட்டைச் சேர்ந்த மிகச் சிறந்த பரத நாட்டியக் கலைஞர். பத்ம பூசம், பத்ம ஸ்ரீ , நாத பிரம்மம், போன்ற பல விருதகள் பெற்றவர்.  இவர் காஞ்சி மகா பெரியவா என்று அழைக்கப்படும் சந்திரசேகர சரஸ்வதியை வணங்குபவர்.

 

பத்மா சுப்ரமணியம் தான் வெளியிட்ட காணொலியில் சில குறிப்புகளை கூறியிருக்கிறார் அவர் கூறிய குறிப்புகளுக்கு பதிலை பார்ப்போம்

  1. வர்ணாசிரம தர்மத்திற்கு எதிராக தோன்றிய மதங்கள் என்று புத்த மதமும் சமண மதமும் வந்தது என்றும் அந்த எதிர்ப்பை வென்று வர்ணாசிரம தர்மம் வென்றது என்று கூறியிருக்கிறார்
    1. இது 100% உண்மை. அதாவது பிறாமணர்களின் சனாதன தர்மம் கூறும் ஹிந்து மதத்தில் மனிதனை மனிதனாகக்கூட பார்க்காத நிலையையும், இதிகாச புராணங்களில் பிறாமணனை பற்றி புகழாரம் பேசி மற்ற இடங்களில் ஆபாசங்களும் அசிங்கங்களையும் புகுத்திய காலத்தில் அருளை அநுபவப் பொருளாகவும், மதத்தில் கூறப்பட்டுள்ள தத்துவத்திற்கு செயல் சித்தாந்தமான வாழ்வியலை வாழ வழி வகுத்த புத்தமும் சமணமும் மக்களுக்கு மறுவாழ்வளித்து என்பது உண்மையே.  இன்றுள்ள நிலைபோல் பெரியாருக்கும் அம்பேத்கருக்கும் பின்னர் வலிமையான தலைவர் தோன்றாததாலும் மக்களின் விழிப்புணர்வு இல்லாத காரணத்தாலும் சனாதன தர்மம் மீண்டும் தழைத்தது. உதாரணமாக பயிர் விளையத்தான் மருந்தும் பாதுகாப்பும் வேண்டும் பதர்களும் களைகளும் வெட்ட வெட்ட வளரத்தான் செய்யும்.
  2. இசுலாமிய மதம் இந்தியாவிற்குள் நுழைந்த போது வர்ணாசிரம தர்மத்திற்கு ஆபத்தில்லை ஆனால் ஐரோப்பியர்களின் வருகைக்கு பின்னரே வர்ணாசிரம தர்மத்திற்கு ஆபத்து வந்தது என்றிருக்கிறார்.
    1. இதுவும் 100% உண்மை , ஏனென்றால் இசுலாமியர்கள் வருமுன்னர் இருந்த மன்னர்கள் கடவுள் கூறியிருக்கிறார் என்றுவர்ணத்தை நம்பியிருந்தனர் பின்னர் வந்த இசுலாமியர்களுக்கு தன் மதம் தவிர மற்ற மதத்தை ஆராய மனமில்லாததாலும் வெறுப்பினாலும் இங்குள்ள சாக்கடையை பற்றி கவலையில்லாமல் பல தலைமுறைகளாக இருந்தனர், ஆனால் ஐரோப்பியர்கள் மற்ற மதத்தில் என்ன உள்ளது என்று ஆராய்வதில் ஆர்வம் காட்டினர். அன்னியர்கள் யார் இந்தியாவிற்குள் வந்தாலும் அவர்களுக்கு சாமரம் வீசும் பழக்கமும் அவர்களுடன் நட்போடு வாழ ஓடோடி செல்லும் பிறாமணர்கள் தன்னிடம் இருக்கும் சாஸ்திரங்களை ஐரோப்பியனுக்கு கொடுக்க அவனும் அதனை மொழிப்பெயர்த்து அனைவருக்கும் படிக்கக் கொடுத்ததின் விளைவே வர்ணாசிரம தர்மத்தின் நச்சு தன்மையை உலகம் புரியவாரம்பித்தது. மனிதனுக்கு மனிதன் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று வெறி மிகுந்த வாழ்க்கைக்கு காரணம் என்று புரியலாயின.
  1. வேதம் படித்தால்தான் உலகம் காக்கப்படும் கொரோனாவிலிருந்தும் நம்மை காக்கும் என்றிருக்கிறார்
    1. இதனையேதான் தமிழின விரோதி சந்திரசேகரேந்திரன் சொல்லியிருக்கிறான் பிறாமணன் வேதத்தை விடுத்ததால்தான் நாடு குட்டிசுவராகிவிட்டது என்று, 3% மக்கள் தொகை கொண்ட பிறாமணர்களில் எத்தனை சதவகீதம் வேதம் படிக்கிறார்கள் என்றால் 5% என்பதே அதிகம், மற்றவர்கள் அனைவரும் அனைத்து துறைகளிலும் இருந்து கொண்டு தன் இனம் காக்கும் செயலை செய்துவருகின்றனர். ஆகையால் 3% மக்கள் அனைவரும் வேதம் படிக்கவேண்டும் வேறெதுவும் செய்யக்கூடாது  உயர் பதிவிகளுக்கு செல்லக்கூடாது என்று சட்டம் வந்தாலே போது நாடு சுபீட்சமாக இருக்கும்.
  2. வர்ணாசிரம தர்மம் மிகவும் உயர்ந்தது புனிதமானது என்றிருக்கிறார்
    1. பத்மா சுப்ரமணியம் அவர்கள் வர்ணாசிரம தர்மத்தை மதிக்கவில்லை என்றே சொல்ல வேண்டியிருக்கிறது. மனு தர்ம சாஸ்திரப்படி இவர் பூப்பெய்துவதற்கு முன்னரே திருமணம் செய்யப்பட்டிருக்க வேண்டும் அப்படியில்லையெனில் மாதவிடாய் குருதியை உண்ட பாவத்திற்கு தகப்பன் ஆளாவான் என்றுள்ளது, இறந்தும் இவர் தந்தைக்கு பாவத்தை சேர்த்து கொண்டிருக்கின்றார். parasaraSmrithi_Page152
    2. வர்ணாசிரம தர்மப்படி திருமணமாகாமல் தந்தையின் வீட்டிலுள்ள பெண்ணை விருஷலீ என்று அழைப்பர் விருஷலீ என்றால் காமுகி என்று பொருள். பத்மா சுப்ரமணியம் அவர்கள் பெற்ற பல பட்டங்களை போல் இதனையும் பட்டமாக ஏற்பாரா?
    3. சாஸ்திரம் தெரிந்த பிறாமணர்களை பொறுத்தவரை (தாங்கள் வணங்கும் மகா பெரியவா உட்பட) பிறாமண வீட்டு பெண்கள் பரதம் ஆடக்கூடாது. தாங்கள் சாஸ்திரத்தை மீறிவிட்டீர்கள் என்று தெரியுமா?
    4. சாஸ்திரம் தெரிந்த பிறாமணர்களை பொறுத்தவரை (தாங்கள் வணங்கும் மகா பெரியவா உட்பட) மருத்துவம் என்பதும் ஒரு தீண்ட தகாத தொழில், இன்று பல மருத்துவர்கள் பிறாமணர்களாக இருப்பது சாஸ்திரத்திற்கு எதிரானதே
    5. சாஸ்திரம் தெரிந்த பிறாமணர்களை பொறுத்தவரை (தாங்கள் வணங்கும் மகா பெரியவா உட்பட) வெளி நாடுகளுக்கு பிறாமணன் செல்லக்கூடாது அப்படி சென்றால் அவன் பிறாமணத்தன்மையை இழந்துவிடுகிறான், இன்று காஞ்சி மடத்திற்கு பணம் வெளிநாட்டு பிறாமணர்களிடமிருந்தும் வருகிறது என்பது இனிக்கிறது
    6. வர்ணாசிரம தர்மப்படி பெண்கள் சுயமாக வாழ்வதோ சுயமாக சம்பாதிப்பதோ தவறு என்கிறது
    7. வர்ண தர்மம் உயர்ந்தது சிறப்பானது என்று சொல்லும் இவர், சாஸ்திரப்படி பிறாமணப் பெண் ஆடக்கூடாது என்று கொச்சையாக திட்டி இன்றிலிருந்து நீ சூத்தரச்சி என்று பிறாமண சமூகம் சொல்லியிருந்தால் சாஸ்திரத்தின் பெயரால் மற்றவர்களின் வலி புரிந்திருக்கும்.
    8. வர்ணாசிரம தர்ம மனுதர்மப்படி பெண்களுக்கு சொத்துரிமை இல்லை, உன் தந்தை உனக்காக எதுவும் விட்டுச்செல்லாமல் இருந்திருந்தால் வர்ணாசிரம தர்மத்தின் வலி புரிந்திருக்கும்

மனு தர்மம் சிறப்பானது என்று சொல்லுமளவிற்கு ஒரு இனமுண்டு என்றால் அது பிறாமண இனம் மட்டுமே ஏனென்றால்

  1. பிறாமணர்கள் வேதம் படிப்பதே நாட்டுக்கு நன்மையளிக்கும் ஆகையால் அவர்கள் வரி கட்ட வேண்டாம் என்று தர்மம் கூறுகிறது
  2. ஒரு நாட்டு மன்னன் வேற்று நாட்டுடன் போருக்கு சென்றால் நீங்கள் செல்லுங்கள் தங்களுக்காக நாங்கள் யாகம் செய்கிறோம் என்று வழியனுப்பிவிட்டு ஒருவேளை மன்னன் வென்றால் உங்கள் வெற்றியில் பங்கு எங்களுக்குண்டு என்று பங்கு பெறலாம் ஒருவேளை மன்னன் தோற்றால் வென்ற மன்னனிடம் பங்கினை பெறலாம் என்று சாஸ்திரம் கூறுகிறது
  3. கொலையே செய்தாலும் பிறாமணனின் தலை முடியை நீக்குவதே அவனுக்கு தண்டனை என்று சாஸ்திரம் கூறுகிறது
  4. எவனொருவன் பிறாமணனை  அவையத்தால் தாக்குகிறானோ அந்த அவையத்தை வெட்டிவிட வேண்டும் என்ற சாஸ்திர ரீதியான பாதுகாப்புள்ளது

வர்ண தர்ம கொடுமைகளை பற்றி பேசும் டி எம் கிருஷ்ணாவை ஒடுக்கியும் வர்ண தர்மத்தை ஆதரிக்கும் பத்மா சுப்ரமணியத்தை எதிர்ப்புமில்லாததுமே வர்ணாசிரம ஆதரவாளர்களே இன்னும் நம்மை ஆள்கின்றனர் என்பதற்கு சான்று.

வர்ண குறிப்பு :- இன்று வர்ணாசிரம தர்ம ஆதரவாளர்களால் எதிர்க்கப்படும் டி எம் கிருஷ்ணா மறைவுக்கு பின் இவர்  ஒரு சமூக போராளி என்ற பட்டம் கொடுக்கப்பட்டு பிறாமணர்கள் தன் வசம் இழுத்துக் கொள்வார்கள் பாரதியை போன்று.

இதுபோன்ற எந்த சலுகையுமில்லாத சூத்திரர்கள் (பிறாமணனுக்கு முன் சத்ரிய வைஸ்ய சூத்திரகள்  சூத்திரர்களே) வர்ணாசிரம தர்மம் என்பதனை மாலை என்று நினைத்தோ ஆபரணம் என்று கருதியோ அணியவேண்டாம் வர்ண தர்மம் என்பது என்றுமே சூத்திரர்களுக்கு தூக்குக்கயிறே!

2 thoughts on “பெண்களும் வர்ணாசிரமமும்

  1. அருமையான கருத்துக்கள் முன்வைத்துள்ளீர்கள் நன்றி.
    பத்மாவுக்கு கல்யாணம் ஆகாமல் ….
    பாவம் அவர் அப்பா!

    Like

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.