மோடியின் வருத்தம் பாரீர்

Gujarat Dalit_0.jpg

தான் பிற்படுத்தப்பட்டவன் என்பதால் ராகுல் என்னை கேலி செய்கிறார்- பிரதமர் மோடி வருத்தம்

இது அரசியல் பதிவல்ல சமூகநீதிக்கான பதிவு, சமூக நீதிக்காக பாடுப்பட்டவர்கள் தனக்கு கிடைத்த/ஏற்பட்ட அவமானங்களை தனக்கு பின் எவரும் சுவைத்திடக்கூடாதென போராடி பெற்றுத்தந்த சமூக நீதியை சற்றும் சிந்தியாமல் சனாதன தர்மமே சிறந்தது என்று வாழும் கூட்டத்திற்காக சமூக நீதி பற்றிய விளக்க பதிவு

இராகுல் காந்தியின் மீது மோடியின் குற்றச்சாட்டை படிக்கும் மோடி பக்தர்களுக்கும் ஏனையோர்களுக்கும் அடடா பாருங்கள் இராகுல் காந்தி எவ்வளவு கீழ்தனமான எண்ணமும், சாதி வெறியையும் கொண்டவர் என்று அழுது புரண்டு அனுதாபத்தை தன் கட்சிக்கு தேடிடுவர், இது முதல் முறையல்ல சென்ற குஜராத் தேர்தலின் போது மணி சங்கர் ஐயர் மோடியை நீசன் என்று சொல்லிவிட்டார் என்று இது புலம்பல் ஒலித்தது. அன்றும் இன்றும் நடந்தது ஓட்டிற்கான நாடகமே.

இது போன்ற அரசியல் நிகழ்வுகளை காணும் சில அப்பாவி மக்கள் சற்று யோசித்து பார்த்தால் மோடி வருத்தப்படவேண்டியது இராகுலின் எண்ணத்தில் மீதா அல்லது வர்ணத்தின் மீதா??

இராகுல் காந்தி எந்த இடத்திலுமே மோடி ஒரு பிற்படுத்தப்பட்டவர் என்று கூறியது இல்லை என்பது மிகத்தெளிவே!

எப்படி போர்கலத்தில் ஒப்பாரிக்கு இடமில்லையோ அரசியலில் நாகரிகத்திற்கு இடமேயில்லை

  1. சதுர் வர்ணம் மயா சிருஷ்டம் என்று கூறிய வர்ண தர்மத்தையோ அல்லது சனாதன தர்மத்தையோ கண்டு வருந்தாமல் அந்த சனாதன தர்மத்தை பாதுகாக்க செயல்படும்போது வருந்தாத மோடி
  2. தனக்கு முன் பிறாமணரல்லாதவர் அனைவரும் சூத்திரன் என்று சொல்லும் பிறாமணர் மீது வராத வருத்தமும் கோபமும் கொள்ளாத மோடி
  3. நான் பிறாமணன் ஆகையால் நான் ஆணையிடுவேன் மற்றவர்கள் (சூத்திரர்கள்) சௌகிதார் நான் சொல்லியதை செய்வார்கள் என்று கூறிய சுப்ரமணிய சுவாமியின் கருத்துக்கு வருந்தாத மோடி
  4. நாட்டின் முதற்குடிமகனான ராம் நாத் கோவிந்த்  அவர்களை கோயிலுக்குள் அனுமதிக்காது அவமானப்படுத்தியதை கண்டு வருந்தாத மோடி
  5. பிறப்பால் வர்ணமில்லை செயலால்தான் வர்ணம் என்று சொல்லிய பிறாமணர்கள் கதையை நம்பிய பலரில் ஒருவராக இருக்கும் மோடி. பிறாமணர்கள் வாயாற மோடியை தனது சனாதன தர்மத்தின் பாதுகாவலன் என்று புகழ்ந்த எந்த ஒரு பிறாமணனும் மோடியை பிறாமணன்தான் என்று இதுவரை அழைக்கவில்லையே என்று வருந்தாத மோடி
  6. உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத் அனுமனை தலித் என்று கூறிய போது வருந்தாத  மோடி
  7. உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலித் இன மக்களை சந்திக்க அனுமதித்த போது அவர்கள் குளித்துவிட்டு வரவேண்டும் அருகில் சென்று விடக்கூடாது என்ற கட்டளையிட்ட போது வருந்தாத மோடி
  8. 2016ல் குஜராத் மாநிலத்தில் இறந்த மாட்டை எடுக்கச் சென்ற தலித் இளைஞர்களை மாட்டை கொன்றார்கள் என்று கட்டிப்போட்டு அடித்தபோது ஏன் செத்துப்போன மாட்டை ஒரு குறிப்பிட்ட பிரிவினரே அப்புறப்படுத்தவேண்டும் என்று சிந்தித்து அவர்களுக்காக வருந்தாத மோடி
  9. 2016ல் 2047க்குள்ளாவது
    1. குஜராத் மாநிலத்தில் உள்ள ஏதாவது ஒரு மாவட்டத்தை தீண்டாமையற்ற மாவட்டமாக மற்ற முயலவேண்டும் என்ற கோரிக்கையைக்கூட வாங்காத குஜராத் அரசின் வருத்தமோ,
    2. ஒரு மாவட்டத்தில் தீண்டாமையை ஒழிக்க முப்பது ஆண்டுகள் தேவைப்படுமா என்ற தீண்டாமை வேரீன் வலிமை பற்றிய வருத்தமோ.
    3. தான் மூன்று முறை முதல்வராக இருந்தபோதும் இதனை பற்றி ஒன்றுமே செய்யவில்லையே என்று வருத்தமோ இல்லாத மோடி

இராகுல் சொல்லாத ஒரு சொல்லை சொல்லிவிட்டார் என்ற நாடகத்தை அரங்கேற்றியுள்ளார்

மேற்கூறியது போன்று  போர்கலத்தில் ஒப்பாரிக்கு இடமில்லை அரசியலில் நாகரிகத்திற்கு இடமேயில்லை என்றாலும் சமூகத்தில் உள்ள சாதிய ஏற்றத்தாழ்வு தன்னை மட்டும் தாக்கும் போது வலிக்கவும் தனக்கு கீழுள்ள மற்றவர்களை தாக்கும் போது இனிக்கவும் செய்யும் குணம் பண்படாத மனிதனின் குணமே கணியன் பூங்குன்றனார் கூறியது போல் மாட்சியல் பெரியோரை புகழ்ந்தலும் இலமே சிறியோரை இகழ்வது அதனினும் இலமே என்ற உயர்ந்த சிந்தனைக்கு மக்களை அழைத்துச்சென்றாலே மனிதன் பண்பட்ட நிலையை எய்துவான் இல்லையேல் பிறாமணனே உயர்ந்தவன் மற்றவர்கள் அனைவரும் சூத்திரர்கள் , சூத்திரர் அனைவரும் பிறாமணனுக்கு சேவகம் செய்யவேண்டும் என்ற மனித நேயமற்ற முதலாளித்துவ சிந்தனைக்கே மனித சமூகம் தள்ளப்படும்.

பிற்படுத்தபட்டவர்களின் வலியை உணர்ந்தது போன்று மிகவும் பிற்படுத்தப்பட்டவர் மற்றும் பட்டியலின மக்களின் வலியை போக்க சனாதன தர்ம எதிர்ப்பை கையில் எடுத்தால்தான் இன்றைக்கு வடிப்பது நீலிக்கண்ணீரா அல்லது சுயமரியாதை கண்ணீரா என்பது உலகறியும்

 

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.