சலுகைகளை இழந்த ஏழை பிறாமணன்

vedic-boy

அப்பாவி பிறாமணனனுக்கு ஏன் சலுகை தர மறுக்கிறீர்கள், பிறாமணனின் சலுகைகளை எல்லாம் பறித்துவிட்டு ஏன் சலுகைகள் தர மறுக்கிறீர்களே.

ஜனநாயகம் என்ற அமைப்பு தோன்றும்வரை பிறாமணன் வாழ்ந்த வாழ்க்கை உனக்கு தெரியுமா??? பிறாமணன் இன்று ஏழையாக யார் காரணம் தெரியவேண்டுமா??? பிறாமணனாக பிறந்தாலே போதும் அனைத்தும் இன்பங்களும் காலடி தேடிவரும்.

  • மன்னர் ஆட்சியில் பிறாமணனனுக்கு வரி விதிக்க முடியாது , இசுலாமியர்கள் , ஐரோப்பிய வருகைக்கு பின்னும் அப்போது ஹிந்து மன்னன் ஆட்சிக்கு உட்பட்டிருந்த பிறாமணர்களுக்கும் வரி கிடையாது
  • எந்த ஒரு மன்னனின் ஆட்சியில் பிறாமணன் பட்டினியாக இருக்கிறானோ அந்த நாடு நிர்மூலமாகிவிடும் என்ற பயத்தில் பிறாமணனுக்கு நல்ல உணவு மற்ற சலுகைகள் கிடைத்தே இருந்தது
  • ஒரு நாட்டுக்கு மன்னனே முதல் குடி மற்றும் அவனே உயர்ந்தவன் என்று உலகம் சொல்லும் ஆனால் மன்னனைவிட உயரமான ஆசனத்தில் அமர பிறாமணனுக்கு சலுகைகள் இருந்தது
  • ஒரு பிறாமணன் கொலை செய்தாலும் அவனுக்கு மரண தண்டனை கொடுக்கப்படக்கூடாது, கொடுத்தால் பிரம்மஹத்தி தோசம் வந்துவிடும் என்ற பயத்தில் பிறாமணனனை நாடுகடத்துவார்கள் அதுவும் மரியாதையாக
  • பிறாமணன் வாழ்ந்த நாட்டை வேறு ஒரு மன்னன் படையெடுத்து வெற்றிப்பெற்றால், வெற்றிபெற்ற மன்னன் மற்ற குடிகளின் சொத்தை பறிமுதல் செய்ய உரிமையுண்டு ஆனால் பிறாமணனின் சொத்துக்களில் கை வைக்ககூடாது, மாறாக புதிய மன்னன் பரிசுகளை தந்து ஆசிகள் பெற்று செல்ல வேண்டும்
  • ஒவ்வொரு சாதிக்கும் ஒரு குல தொழில் உண்டு அந்த தொழிலை கொண்டு நாட்டிற்கோ தன் வாழ்வாதாரத்திற்கோ செயல்படுவார்கள்  ஆனால் பிறாமணனுக்கு வேதம் ஓதுதல் மட்டுமே தர்மம் அதற்கு மன்னன் தேவையான உதவிகளை செய்து மன்னன் புண்ணியம் தேடிக்கொள்வான்
  • மன்னன் போருக்கு செல்லும் போது நீங்கள் போங்கள் உங்களுக்காக இதுவரை வேதம் ஓதி நாட்டை காப்பாற்றியது போன்று நீங்கள் போர்களத்தில் போர் புரியும் போது நான் வீட்டிற்குள் வேதம் ஓதி காப்பேன்
  • ஒருவேளை போருக்கு சென்ற மன்னன் போரில் தோற்றால் புதிய மன்னனிடமும் நாட்டை பாதுகாக்க வேதம் ஓதுவோம்
  • பிறாமணன் வாழும் வட்டாரத்தில் பிணத்திற்கோ ,  சூத்திரகளுக்கோ அனுமதிக்கூட கிடையாது
  • பிறாமணன் வாழும் வட்டாரத்தில் கடவுள்களில் பலியிடப்படும்  மரபு கொண்ட எழுந்தருளிகளும் செல்ல அனுமதியில்லை
  • பிறாமணன் காதில் சூத்திரனின் குரலோ , கண்ணில் பட்டிடவோ கூடாது என்றெல்லாம் சலுகைகளோடு வாழ்ந்தனர்
  • பிறாமணனை எந்த அவயத்தால் தீங்கு செய்கிறார்களோ அந்த அவயத்தையே வெட்ட வேண்டும் என்றளவிற்கு உரிமையும் பெருமையும் கொண்ட வாழ்க்கை சூழல் இருந்தது

இப்படியெல்லாம் சலுகைகளை கொண்ட பிறாமணனனை சலுகைகளை நிறுத்தி எந்த ஒரு புதிய கல்வி முறை வந்தாலும் (ஆங்கிலம்., ஹிந்தி) சலுகைகள் இல்லாத காரணத்தால் பிழைப்புக்காகவும் மற்றும் எந்த மன்னன் ஆண்டாலும் மன்னன் வீழும்வரை அவனுக்கு ஆதரவாக இருக்கவேண்டும் என்ற தர்மத்திற்காக புதிய கல்வி முறை வாழ்வியல் நிலைகளை ஏற்றார்கள்

ஒவ்வொரு சாதியினரும் தனக்கு தெரிந்த தொழிலால் நாட்டிற்கு தன்னால் இயன்ற ஒரு சேவையை செய்வார்கள் ஆனால் சாஸ்திரத்தில் சொல்லியிருக்கிறது வேதத்தில் சொல்லியிருக்கிறது அதனால் கடினமான தொழில் பிறாமணன் செய்யக்கூடாது என்று சுகபோக வாழ்க்கையை ஜனநாயகம் என்ற பெயரில் மன்னர் ஆட்சியை கலைத்து, மன்னர் ஆட்சியில் கிடைத்த சலுகைகள் அனைத்தும் கிடைக்காமல் செய்தது சாஸ்திரத்திற்கே எதிரானது என்பதனை நீங்கள் புரிந்துகொள்ளமாட்டீர்கள்…. பிறாமணனுக்கு சலுகை கொடுத்தால் நாடு சுபிட்சம் அடையும் டாலர் விலை குறையும், பெட்ரோல் விலை குறையும், விஞ்ஞானிகள் கண்டுபிடித்தவுடன் அதுதான் தெரியுமே என் வேதத்தில் அப்பவே எழுதியாச்சு என்று வாய்ப்பேச்சு பேசும் வாழ்க்கை பிறாமணனுக்கு கிடைக்குமா???

பிறாமணனுக்கு முன் அனைவரும் சூத்திரன் என்பதனை மறந்து பல நூற்றாண்டுகளாக தனக்குள் அடித்துகொண்ட முட்டாள்கூட்டமாக வாழ்ந்து தன் இன மக்களையே மிருகத்தைவிட கேவலமாக நடத்தி அடிப்பவனும் சூத்திரன் அடிவாங்குபவனும் சூத்திரன் என்பதனை மறந்ததால் வேலையே செய்யாத இனம், இந்த 70 ஆண்டுகளில் வேலை செய்யும் போது ஐயோ அம்மா நான் ஏழ்மையுள் உள்ளேன் சூத்திரர்கள் சுகபோக வாழ்வு வாழுகிறார்கள் என்ற ஓலக்குரல் கேட்கிறது

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.