சமசுகிருதம் வெறும் வாய்ச்சொல் வீரமா?

Human-Head-Transplant
https://www.express.co.uk/news/science/880926/Human-head-transplant-world-s-first-successful-corpse-Sergio-Canavero

சிறு வயதில் நமக்கு ஏற்படுகின்ற கேள்விகளுக்கு பதில் தெரியாமலையே நாம் அடுத்த தலைமுறையை வழிநடத்தி… நமக்கு தெரியாத பதிலை அடுத்த தலைமுறைக்கு பாரம்பரியமாக செய்து வருகிறோம் என்ற பெயரில் கேள்விகள் மட்டுமே கேட்டுவிட்டு  அல்லது கேள்விகேட்காமல் வாழ வழிநடத்திவிட்டு செல்கின்ற வழக்கம் எத்தனை தலைமுறையாக நடக்கிறதோ !!!! அதனை மீறியும் கேள்வி கேட்டால் போடா நாஸ்திகா என்று அவப்பெயரும் வந்துவிடும் ( ஆத்திகர்கள் வீட்டை பொறுத்தவரை நாத்திகன் என்பது எதோ கொலை குற்றவாளி போன்று பார்க்கப்படும் அவலம் உண்டு )

சமசுகிருதத்தில் இது உள்ளது அது உள்ளது என்று வாய் வீரம் பேசுவோர் ஒரு கல்லையாவது புரட்டி போட்டுள்ளனரா என்றால் இல்லைவே இல்லை என்பதுதான் இன்றைய உண்மை நிலை… உதாரணமாக

1- மகா பாரதத்தில் 100 கௌரவர்கள் பிறந்தனர்?

இந்த கேள்வியை நாத்திகன் கேட்ட போது பதில் தெரியாதவர்கள் குதித்தனர் தாவினர் பின்னர் சாடினர்!!! விஞ்ஞானம் டெஸ்ட் டியூப் முறையை கண்டுபிடித்தவுடன் . ஆத்திகர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி உடனே விஞ்ஞானத்தின் சாதனையை தான் மகா பாரத காலத்தில் செய்தனர் என்று மார்தட்ட ஆரம்பித்தனர்.

இதில் ஒரு கேள்வி , விஞ்ஞானிகன் கூறும் முன் இதனை ஆத்திகன் விளக்கியோ அல்லது செய்திருந்தால் நாத்திகம் வளர்ந்திருக்குமா???

பதில் தெரியாத காரணமே ஆத்திகனை விமர்சனத்திற்கு உரியவனாக்கிறது.

2-  இதே நிலை தான் கணித கண்டுப்பிடிப்புகளின் பின்னும் வேதத்தில் இது உள்ளது அது உள்ளது என்று தன்னுடைய பெருமை பீற்றீக்கொண்டனர்.

3- அதே போன்று கேள்வி கேட்கப்படுகின்றதே அல்லது சமசுகிருதம் ஆளுமையை இழந்திடுமோ என்ற பயத்தில் ஆராயப்படாமல் அல்லது ஆராயாமல் பல புதிய கற்பணைகளை உருவாக்கி வருகின்றனர் பிறாமணர்களும் அவர்களின் பாதுகை தாங்குபவர்களும்.

4- சமீபமாக நடந்த தலை மாற்று சிகிச்சைக்கு பிறகு இது வேதத்தில் உள்ளது என்றனர். ஏன் இதனை இந்தியாவில் சமசுகிருத பண்டிதர்கள் சேர்ந்து செய்திருந்தால் மருத்துவ சமூகமே கைக்கட்டி வாய்பொத்தி பின் வந்திருக்குமே??

5- அரசியல்வாதிகள் பலர் வேதத்தில் அது இருக்கிறது அது இருக்கிறது என்று அன்னிய நாட்டினர் உருவாக்கிய வாகனங்களையும் ஆயுதத்தையும் கல்வியையும் பிடித்து தொங்கும் சொல் ஒன்றும் செயலொன்றுமான நிலையே நிலவுகிறது

6- ஒருவர் இறந்தால் அவர் பித்ரு உலகம் சென்றடைய ஓராண்டுகாலம் ஆகும் அதற்காகதான் ஒருவர் இறந்தபின் ஓராண்டிற்குள் மாதா மாதம் பல சடங்குகள் நடத்தபடுகிறது என்று காரணம் கூறுவார்கள். இந்த ஓராண்டு அப்படி எங்கு தான் பயனப்படுகிறார்கள் என்ற கேள்வி வலுக்க.. ஒரு பிறாமணர் தொலைகாட்சி நிகழ்ச்சியில்  ”இறந்தவர் நிலவுக்கு செல்கிறார்கள் அதற்கு ஓராண்டு ஆகிறது” என்று விளக்கம் கூறினார். இப்படிபட்ட பதில்கள் பலரை மீண்டும் பல விமர்சனங்களை தான் பெற்று தருமே தவிர மரியாதையை அல்ல.

வேதத்தில் இது இருக்கிறது அது இருக்கிறது என்று கூறுபவர்கள் தாமாக முன்வந்து விஞ்ஞானம் ஒரு கண்டுபிடிப்பை செய்யும் முன் இவர்கள் ஒரு கண்டுபிடிப்பை செய்து மானுட நலனுக்கோ பலனுக்கோ எதேனும் கண்டுபிடித்தால் கேள்விகள் கேட்பவர்களை மாணவனாகவும் பதில் கூறுபவர்களை ஆசானாகவும் மாறி இந்திய சமுதாயத்திற்கு நன்மைபயக்கும் .

சமீபமாக நமது நாட்டு பிரதம ர்  திரு மோ டி அவர்கள் புவி சூடாதல் பற்றிய உலக நாடுகளின் சந்திப்பில் சமசுகிருத வேதத்தை படித்தால் புவி சூடாதலுக்கு தீர்வு கிட்டும் என்றார், இதில் ஒன்று புரிகிறது நமது பிரதமர் வேதம் படிக்கவில்லை என்று ஏனெனில் படித்திருந்தால் மற்றவர்களை படிக்கச்சொல்லாமல் தீர்வை சொல்லியிருப்பார்.

அதுமட்டுமல்லாமல் மாட்டு சாணத்தையும் மாட்டு கோமியத்தை ஆராய்ச்சி செய்ய  விஞ்ஞானகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார், இதனை வேதத்திலேயே தேடியிருக்கலாமே ஏன் விஞ்ஞானிகளை நாடவேண்டும் வேத்ததில் கோமியத்தின் மகிமை என்ற புத்தகத்தை வெளியிட்டால் மாட்டின் சாணமும் கோமியமும் குடிக்கும் கும்பல் பண் மடங்காக ஆகுமே

ஆனால் வேதத்தை படிப்பது மட்டுமே வர்ணதர்மமாக செய்துவரும்  பிறாமணர்களாவது உடனடியாக தங்களின் மிக விருப்பமான தலைவருக்கு பதில் சொல்லி இருக்கலாம் அல்லது தாங்கள் படித்த வேதத்தில் உள்ள புவி சூடாதல் பற்றி தீர்வு சொல்லியிருக்கலாம். ஆனால் இன்று வரை அப்படி ஒன்றும் கேள்விப்பட்டதாக இல்லை என்ற போது ஒன்று தெளிவாகிறது சமசுகிருதம் வெறும் வாய்ப்பேச்சுதான் என்று