சமசுகிருதம் தேவ பாஷையா

சமசுகிருதமே தேவ பாஷ, சமசுகிருதத்தில் உள்ள வேதங்கள் உபநிஷத்துக்கள் மிகவும் பழமையானவை அதில் இல்லாதது ஏதும் இல்லை அதனால் சமசுகிருதத்தில்தான் பூஜைகள் செய்யவேண்டும் என்று சொல்லும் சமசுகிருதத்தை தாய் மொழியாகச் சொல்லக்கூட முடியாத பிறாமணர்களும்( இவர்கள் வாழும் வட்டாரத்து மொழியையே பேசியும் படித்தும் அதனையே தாய்மொழியாக வாழ்பவர்கள், இவர்கள் தன் தாய்மொழியை இழிக்கும் விதமாக சமசுகிருதத்தில் பூஜைகளை செய்துகின்றனர்).  பிறாமணர் மட்டுமல்ல பிறாமணரல்லாதவர்களும் சமசுகிருதத்தில் மட்டுமேதான் பூஜை செய்ய வேண்டும், வேண்டுமானால் தமிழிலும் பூசை (இந்நிலை தமிழகம் தவிர வேறெங்குமில்லை) செய்யலாம் என்ற எண்ணம் உள்ளது. அந்த சிந்தனையை வலுவூட்டும் விதமாக மக்களின் பொழுதுபோக்கு என்று ஆரம்பித்த திரைப்படங்கலும் சமசுகிருதத்தை தூக்கி பிடிக்கிறது.

எந்த நாட்டிலோ மாநிலத்திலோ மாவட்டத்திலோ கிராமத்திலோ பேசப்படாத மொழியாகிய சமசுகிருதம் எங்கே எவ்வாறு எப்படி தேவ பாஷை ஆகும்? வாழும் மொழியே அல்லாத சமசுகிருதம் எனும் பிணம் எவ்வாறு தேவ பாஷை என்ற தகுதி பெறும்?

பிணத்தை தேவ பாஷை அல்லது கடவுள் மொழி என்று சொல்லலாமா?

தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி  என்ற ஒன்று போதும் தமிழே தெய்வ மொழி என்பதற்கு. சிவன் என்பவன் தென்னாட்டு கடவுள் தமிழனே!, அவனை எந்நாட்டவரும் இறைவனாக வணங்கலாம். இப்படி தெளிவாக வரிகள் இருந்தும் இறந்த மொழியான சமசுகிருதம்தான்  கடவுள் மொழி என்று சொல்லும் அவலம் தமிழகத்துக்குள்ளேயே தமிழர்களாலேயே நடக்கிறது என்பதே வேதனை.

இப்பதிவில் சமசுகிருதத்திற்கும் தெய்வீகத்திற்கும் தொடர்பேதுமில்லை என்பதனை இன்றைய நிலையில் உள்ள உலகியல் நிகழ்வு மற்றும் சான்றுகளை வைத்து ஆராய்வோம்

தமிழின் உயிர் எழுத்துக்கள் அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ அதுவே சமசுகிருதத்தில் (ஹிந்தி மற்றும் பெரும்பாலான வடமொழிகளின் எழுத்துக்கள்) अ (அ), आ ( ஆ), इ (இ),ई (ஈ),उ (உ),ऊ (ஊ),ऋ (ri),ए (ஏ), ऐ (ஐ),ओ (ஒ), औ (ஔ).

 தமிழில் உள்ள எ என்று எழுத்தும் ஓ என்ற எழுத்தும் சமசுகிருதத்தில் இந்த இரண்டு வேறுபாடே போதும் சமசுகிருதத்திற்கும் தெய்வீகத்திற்கும் தொடர்பேயில்லை என்று

ஓ என்ற எழுத்தை எழுதக்கூட எழுத்துக்கள் இல்லாத மொழியா  ஓம் என்ற சொல்லுக்கு விளக்கம் தரப்போகிறது? சமசுகிருதத்தில் ஓம் என்ற சொல்லோடு துவங்கும் மந்த்ரம் ஸ்லோகம் … பல உள்ளன, ஓ என்ற எழுத்தே இல்லாமல் ஓம் என்ற சொல் எப்படி தோன்ற முடியும்? எப்படி இலக்கியத்திலிருந்து இலக்கணம் எடுக்கப்படுமோ அதேபோல்தான் பேச்சு மொழிக்கேற்றவாரே எழுத்துருக்களின் தேவையும் எழுத்துரு உருவாவதும் உண்டு அப்படி பார்க்கும் போது சமசுகிருத வேதம் உபநிஷத் போன்றவற்றில் உள்ள ஓம் என்ற சொல் அவர்களுடையது இல்லை என்பது புலனாகிறது. தமிழில் ஓ என்ற எழுத்து ஓம் என்ற சொல்லுக்கு மட்டுமல்லாது பல சொற்களில் உள்ளது, தமிழரே ஓம் என்று சொல்லை உரிமையோடும் பெருமையோடும் பயன்படுத்த முடியும், தமிழே தெய்வ மொழி, தெய்வீக மொழி என்பதற்கு இதுவும் ஒரு சான்று.

சமசுகிருதத்தில் ஓ இல்லை எனில் சமசுகிருதத்தில் ॐ என்றே பயன்படுத்துகிறார்களே என்று கேள்வி எழும். ஓ என்பது தமிழில் உள்ள உயிர்ழுத்துக்களில் ஒன்றாக எழுத்துருவோடு உள்ளது ஆனால் ॐ என்பது சமசுகிருதத்தில் உள்ள உயிரெழுத்திலும் இல்லை மெய் எழுத்திலும் இல்லை.

கீழ்கண்ட சொற்களை சமசுகிருதத்தில் எழுத முடியாது.  ஓம், ஓமம், ஓகம், யோகம், யோகாசனம், ஓகாசனம், மாயோன், நெடியோன். தென்னகத்தில் ஓடும் ஒரு நதியான கோசலை ஆறு என்பதனை ஓ இல்லாததால் சமசுகிருதத்தில் கொஸஸ்தல ஆறு என்கிறார்கள்.

நமது நாட்டின் பிரதமரான மோதி பெயரை சரியாக தமிழில் எழுதவேண்டின் (मोदी மொ+ தி (மூன்றாவது த) என்றே எழுதவேண்டும்.

அடுத்ததாக உள்ள உயிரெழுத்து எ என்ற எழுத்து. கீழ்கண்ட சொற்களை சமசுகிருதத்தில் எழுத முடியாது.

எல்லாம் வல்ல, பெருமால், நெடியோன்,   போன்ற சொற்கள்.

எ என்ற எழுத்து சமசுகிருதத்தில் இல்லை ஆனால் தமிழில் உண்டு அதன் காரணமாக மற்றொரு குழப்பமும் நடக்கிறது. அதாவது நாம் அடிக்கடி கேட்கும் சொற்களாகிய ஜெய் ஸ்ரீராம், ஜெய ஜெய சங்கர, ஜெய் பீம் போன்ற சொற்கள் சமசுகிருதத்தில் எழுதவே முடியாது ஏனெனில் ஜெ என்ற உயிர் மெய் எழுத்து ஜ + எ ஆகும் சமசுகிருதத்தில் இல்லை. அதனால் அவர்கள் மேற்கண்ட சொற்களை ஜய் ஸ்ரீராம், ஜய ஜய சங்கர, ஜய் பீம் என்றுமே உச்சரித்தும் எழுதியும் வருகின்றனர். மேற்கண்ட சொற்களை சமசுகிருதத்தில் எழுதவேண்டுமெனில் (ஜய் பீம்) जय भीम (ஜய் ஸ்ரீ ராம்) , जय श्री राम,

  ஜெயம் என்ற சொல் தமிழில்லை அது சமசுகிருதமும் இல்லை, அதன் பொருள் வெற்றி என்றெல்லாம் சொல்லுவார்கள் தமிழகத்தில் உள்ள சமசுகிருத அடிவருடிகள்.  ஜெயம் என்ற சொல்லை எப்படி எழுத முடியும் என்று யோசித்த்தார்களா? எப்படி தமிழ் எழுத்துக்களில் சிறிய மாற்றம் செய்து (சலம்= ஜலம், பூசை = பூஜை, சிவன்= ஷிவன்,) வடமொழியாக்கப்பட்டதோ அதே போன்று செய என்ற  சொல்லை ஜய என்று திருடிச்சென்று மீண்டும் அது தமிழகம் வரும்போது ஜெய என்று உருமாறியுள்ளது. ஜெயம் என்ற சொல்லை இந்து மதத்தவர் மட்டுமல்ல கிறித்துவ மதத்தினரும் மிகுதியாக பயன்படுத்துகின்றனர். செய என்ற தமிழ்ச் சொல்லுக்கு  செய் செய்ய என்றாக பொருள்.

எ என்ற மற்றொரு எழுத்தின் வழியாக தமிழே தெய்வ மொழி என்றும் தெய்வீகத்தில் பயன்படுத்தும் சொற்களுக்கு தமிழிலேயே பொருள் தரமுடியும் என்பதனை பார்த்தோம்

இப்போது மெய் எழுத்தில் உள்ள வேறுபாட்டினை பார்ப்போம். தமிழில் உள்ளது போன்று ர மற்றும் ற வில் ர என்ற எழுத்தே உள்ளது, அதே போன்று ல ள வில் ல மட்டுமே உண்டு.

சமசுகிருதத்தில் இராமன் என்ற சொல்லை எழுதலாம் ஆனால் மாறன் என்ற சொல்லை எழுத முடியாது அதேபோல் திருக்குறள் என்பதை திருக்குரல் என்றுதான் எழுதமுடியும். சைவ = சிவ வழிபாட்டில் உள்ளவர்கள் பயன்படுத்தும் சொல்லாகிய ஹர ஹர நமப்பார்வதி பதயே என்றும் ஹர ஹர மகாதேவா என்றும் ஹர ஹர ஸங்கர என்று சொல்வதை கேட்டுள்ளோம்.

ஆனால் சித்தர்கள் கூறும் முறைப்படி அர அற என்றே உள்ளது அதாவது அர அற நமப் பார்வதி பாதமே போற்றி அர அற மகாதேவப் பாதமே போற்றி, வழக்கம் போல் அ வை ஹ என்று மாற்றிவிட்டு வடமொழியில் இருக்கும் ஒரே ஒரு வை சேர்த்து ஹர ஹர என்று பொருளற்றதாக ஆக்கிவிட்டனர் இதனை தமிழர்களும் ஏற்றனர். அர அற என்ற சொல்லின் ஆழமான பொருளை மக்கள் உணரமுடியாத அளவிற்கு சமசுகிருதம் எனும் பிணம் தேவ பாஷை என்ற மாயாவாதம் பேசுகிறது

பிறமண்ணினர் எனும் வட ஆரியர்களான பிற+ மண்ணினர் = பிறாமணர் என்ற சொல்லும் சமசுகிருதத்தின் குறையால் உச்சரிக்கும் போது வல்லின றவை பயன்படுத்திவிட்டு எழுதும்போது அது இடையின ஆனதால் பிற+மண்ணினர் பிறாமணர் பிராமணர் ஆனார்கள். தமிழனும் ஏமாந்தான். இதனை தமிழர்கள் இனியாவது பிறாமணர் என்று எழுத முற்படுவார்களா?

மாரியம்மன் பற்றிய கதைகளில்

ரேணுகா தேவியின் உடலில் அருந்ததிப் பெண்ணின் தலையும், அவளுடைய உடலில் தேவியின் தலையுமாக மாறியதால், தலைமாறி உயிர் பெற்றதால் பரமேஸ்வரிக்கு மாரியம்மன் என்ற பெயர்.

From <https://giritrading-tamil.blogspot.com/2019/08/blog-post_25.html>

இங்கு மாரி மற்றும் மாறி என்பதற்கு பொருள் புரிந்த தமிழன் அமைதியாக அந்த கதையை சிந்திக்காமல் ஏற்றான்

இதுமட்டுமல்ல தமிழில் உள்ள ர மற்றும் ற கொண்ட சொல்லில் உள்ள வேறுபாடும் ஆழமான பொருளும்  தரம் – Quality, திரம்- Strength, திறம் – Ability

நிறம் = நிரம், மாரி மாறி ,மரம் மறம்,குரை குறை,குறல் குரல்,மரி மறி,நெரி நெறி.. என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

தமிழ் மொழி எழுத்துக்களின் மூலம் தமிழே தெய்வ மொழி, தமிழர்களுடையது தான் இந்துமதம் என்பது தெளிவாக உணர முடிகிறது, அருட்பா அருளிய இராமலிங்க அடிகளார் தமிழே சுத்த சிவ அநுபூதியை தரும் என்றார், தமிழகத்தில் மட்டும்தான் தொடர்ச்சியாகவும் வாழையடி வாழையாகவும் அருளாளர்கள் தோன்றினர், தோன்றுகின்றனர் இனியும் தோன்றுவார்கள், 63 நாயன்மார்கள் , 12 ஆழ்வார்கள் , 96 தொகையடியார்கள், சந்தானாச்சாரியார்கள், ஆதி சங்கரர், இராமானுசாச்சாரியார், அருணகிரியார், பத்திரகிரியார், பட்டினத்தார், வள்ளலார் … என்ற பட்டியல் தொடர்ந்து கொண்டே உள்ளது, மேற்குறிப்பிட்டவர்களில் ஒருவர் கூட பிறாமணரல்ல. இப்படி ஒரு நெடிய பட்டியலை சமசுகிருதத்தால் தரவியலாது ஆனால் இந்தியாவில் வாழும் மொழிகளில் கண்டிப்பாக அருளாளர்கள் தோன்றி தன் தாய் மொழியில் தன் அருள் அனுபவங்களை பாடியுள்ளனர் அல்லது சில தத்துவ நூல்களாக வடித்துள்ளனர். இப்படிப்பட்ட நிலை சமசுகிருதத்திற்கு என்றுமே இருந்ததில்லை.

இப்படி தமிழை விழுங்கி சமசுகிருதம் வளர நினைத்த காரணத்தினாலேயே சமசுகிருத மொழி தன் இனத்தார்கூட பேச முடியாமல் இறந்தது, ஆனாலும் இறந்த சமசுகிருதத்தின் இனத்தினர் மற்ற இனத்தாரோடு அவர்கள் மொழி பேசும் இனத்தினராக இருந்தாலும் தன் பிண மொழிக்கு ஒரு தீங்கு வராமலும் தங்களுக்குள் ஒற்றுமையையும் வளர்த்துக்கொண்டு இருக்கின்றனர். மாறா இளமையும் திகட்டாத இனிமையையும் கொண்ட தமிழ் வாழ்ந்து கொண்டிருந்தாலும் தமிழ் இனத்தவர் ஒற்றுமையின்றி சாதியாலும் மதத்தாலும் நாத்திகர் ஆத்திகர் என்று பிரிவினை பேசி தமிழை சமசுகிருதத்தின் வேட்டைப்பொருளாக ஆக்கிவிட்டனர்.

”இந்துக்களே! கோயில்களில், பூசைகளில் சமசுகிருதத்தைப் பயன்படுத்துவது பெரிய பாவம், கொடிய தீட்டு, நெடிய சாபம்” தஞ்சைப் பெரிய கோயிலைக்கட்டிய பதினோராவது பதினெண்சித்தர் பீடாதிபதி குருமகா சன்னிதானம் ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறாரின்  குருபாரம்பரிய  வாசகம்.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.