தஞ்சைப் பெரிய கோவில் குடமுழுக்கு

Raja_raja_cholan

மன்னர்மன்னன் ராசராசனை சொந்தம் கொண்டாடாத சாதிகள் என்று மிகச்சிலவே உள்ளது என்று சொல்லும்படி பலரும் இராசராசனை தன் சாதி, தன் சாதிக்குரியவன், தன் சாதியின் அடையாளம் என்று மார்தட்டிக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களில் ஒருவரேனும் இந்த மாமனிதன் என் இனத்தவன் அவன் கட்டிய கோயிலுக்கு அவன் மொழியும் என் மொழியுமாகிய தமிழ் மொழியிலேயே குடமுழுக்கு செய்ய வேண்டும் என்ற பேச்சு வரவில்லை! சிந்தை எழவில்லை! இது ஏனோ இந்த அடிமைத்தனம்?

இராசராசன் காலத்தில்தான் சைவ சமயத்தின் உயிர் நாடியாக கருதப்படும் பன்னிரு திருமுறைகள் தொகுக்கப்பட்டது ( பூச்சிகளால் அரிக்கப்பட்டு இருந்த ஏடுகளை கண்டபோது அசரீரி ஒலித்து ”தேவார ஏடுகளில் இக்காலத்துக்கு வேண்டுவனவற்றை மாத்திரம் வைத்து விட்டு எஞ்சியவற்றைச் செல்லரிக்கச்செய்தோம் கவலற்க” ). அசரீரி கூறியதை மேற்கோள் காட்டியாது இராசராசன் தொகுத்த  தெய்வத் திருமுறைகளை ஓதி/ பாடல் பாடியும் எங்கள் கோயில்களுக்கு நாங்கள் குடமுழுக்கு செய்கிறோம் என்று சொல்வோரும் இல்லை.

சைவ சமய மடங்கள் அல்லது சைவ ஆதீனம் என்று சொல்லப்படும் மடங்கள், தமிழர்களால் தமிழர்களை தலைமையாக கொண்ட எந்த மடமும் தங்கள் மடங்களின் தலைமையின் கீழ் குடமுழுக்கு நடத்தப்படவேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்ததாக தெரியவில்லை. குறைந்தது அவரவர் மடங்கள் நிறுவப்பட்ட தலைமையின் கொள்கை குறிக்கோளை எண்ணியாவது தமிழில் குடமுழக்கு செய்யப்படவேண்டும் என்று சொல்லவில்லை. அவரவர் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களையும் பிறாமணர்களிடம் அடகு வைத்துவிட்டு ஏமாளித்தனத்தை தொடர்கிறது.

தமிழகத்து கோயில்களுக்கு தமிழ் அல்லாது மாற்று மொழியில் பூசை, சடங்கு, குடமுழுக்கு ஏன் செய்ய வேண்டும் என்ற கேள்வி தமிழர்களுக்கு இடையில் இன்னும் எழவில்லை அதாவது தமிழர்களின் சிந்தையிலும் இந்த எண்ணம் எழாத நிலையில் நாம் தமிழர் என்ற பெருமையைப் பேசிப் பொழுதைக் கழித்துக் கொண்டு இருக்கின்றோம். என் இனம் என் மொழி என் நாடு என்ற சிந்தனை இல்லாமல் அந்நியர்களுக்கு சாமரம் வீசி அன்னியர்களுக்கு கங்காணிகளாகவும் வாழ பழகிவிட்டோம்.

கோயில் பூசாறிகளுக்கு தமிழ் மந்தரங்கள் பயிற்சி தருகிறோம் என்ற முயற்சியை நண்பர் ஒருவர் மேற்கொண்டார் அப்பொழுது ஒரு பிறாமணர் குறுக்கே வந்து நண்பரிடம் கேள்விகளை கேட்டுவிட்டு நீங்களெல்லாம் தமிழில் செய்ய தொடங்கிவிட்டால் நாங்கள் எங்கே செல்வோம் என்றார்….. அதாவது சமசுகிருத மோகம் உள்ளவரைதான் தமிழகத்தில் பிறாமணனுக்கு பிழைப்பு என்பது பிறாமணனுக்கு நன்றாக தெரியும். இதனை அறியாத புரியாத இனமாக தமிழினம் தன் மொழி பெருமையையும் புரியாமல் தன் இன பெருமையையும் அறியாமல் ஏமாளியாகவே பல நூற்றாண்டுகாலம் அடிமைப்பட்டு இருக்கிறது.

தமிழினத்தின் பெருமையை பறைசாற்றும் விண்ணுயர்ந்த கண்கவர் கோபுரத்தை உடைய தஞ்சை பெரிய கோயில் பெயர் பலகை பிரகதீஸ்வரர் கோயில் என்று 2018 மார்ச் மாதம் 18ஆம் தேதி  முன்வரை இருந்த பதாகையை , தஞ்சை பெரிய கோயில் என்று மாற்றப்பட்டது இது தமிழர்களுக்கு ஏற்பட்ட விழிச்சியின் காரணமாகவே நடந்தேறியது. த்மிழகத்து கோயிலுக்கு தமிழில் பதாகை வைக்கவேண்டும் என்ற கோரிக்கையோடு நில்லாமல் தமிழகத்து கோயிலில் சமசுகிருதம் வேண்டாம் தமிழே வேண்டும் என்ற எண்ணம் தமிழர்கள் அனைவருக்கும் ஏற்பட்டால் தமிழினத்துக்கு தன்னம்பிக்கை ஊக்குவிக்கும்

29542050_1580981968624025_765917559645979212_n

தமிழினம் எப்போதெல்லாம் இனப்பெருமையோடோ, மொழிப்பெருமையோடோ அல்லது சமய நூல்களின் பெருமையை உணரும் போதெல்லாம் குள்ள நரிக்கூட்டம் இருக்குமிடம் தெரியாமல் ஓடி ஒளியும், என்று மேற்கூறிய பெருமை குறைகிறதோ அல்லது சூழ்ச்சியால் குறைக்கப்படுகிறதோ குள்ளநரி மீண்டும் நாட்டில் வலம் வரும்.

சமசுகிருதம் ஒரு செத்த மொழியே அதே போன்று சமசுகிருதத்தில் செய்யப்படும் சடங்குகளும் சமசுகிருதத்தின் நிலையே உரித்தாகும். தமிழா விழித்திரு உன் மொழிக்கு நீயே துரோகியாகிடாதே!!!

One thought on “தஞ்சைப் பெரிய கோவில் குடமுழுக்கு

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.