விஜயேந்திரனின் ஆகம மீறல்

2021 பிப்ரவரி 22 ந் தேதி காஞ்சி மடத்தின் மடாதிபதி ( காஞ்சி மடத்திற்கும் ஆதிசங்கரனுக்கும் தொடர்பே இல்லை என்பதனால் காஞ்சி சங்கராச்சாரியார் என்று குறிப்பிடாமல் காஞ்சி மட மடாதிபதி என்றே பதிவிடுகிறேன், அதேபோல் ஆதிசங்கரனால் நிறுவப்பட்ட மற்ற மடங்களின் மடாதிபதிகளுக்கு சரஸ்பதி என்ற பட்டம் உண்டு அதனையும் காஞ்சி மடத்திற்கு பயன்படுத்த முடியாது) விஜயேந்திரன் இராமேசுவரத்தில் உள்ள சிவன் கோயில் கருவறைக்குள் நுழைந்து பூசை செய்யவேண்டும் என்று அடாவடியாக உள்ளே நுழைய முற்பட்டுள்ளார் அதனை அந்த கோயிலின் குருக்கள்கள் தடுத்த முயற்சித்து இறுதியாக விஜயேந்திரன் கோயில் ஆகம விதிகளை மீறி கருவறைக்குள் சென்று வந்துள்ளான். இந்த செய்தியை முடிந்தவரை திரித்தும் மறைத்தும் குறைத்துமே வெளியிட்டிருக்கின்றன ஊடகங்கள். ஊடகத்துறையின் நம்பகத்தன்மையை சந்தேகிக்கும் மற்றுமொரு நிகழ்வாகிறது இது.

விஜயேந்திரன் செய்த அத்துமீறலை ஒரு சாமானியன் செய்திருந்தால் மதத்தின் பெயரால் உள்ள கட்சிகளும் மடங்களும் அந்த நபரை கழுவில் ஏற்றியிருக்காதா?

ஆதிசங்கரனால் நிறுவப்படாத மடம் என்று குறிப்பிடும் மக்களும் காஞ்சி மடத்தை சங்கர மடம் என்றும் காஞ்சி மடத்தின் மடாதிபதிகளை சங்கராச்சாரியார் என்றும், சரஸ்வதி என்றும் அழைப்பதும் தொடர்ந்து நடக்கிறது. திருடன் என்று தெரிந்த பிறகும் திருடிய சொத்துக்களை அவனிடம் விட்டு வைக்கலாமா இனிமேலாவது காஞ்சி மடம் என்பதோடு நிறுத்திக்கொள்வோமா நாம்???

1839ல் சிருங்கேரி மடத்தின் கிளைகளுள் ஒன்றான கும்பகோண மடம்,காஞ்சிபுரம் கோயில் குடமுழுக்கை  தக்க நேரமாக பார்த்து தாந்தான் ஆதி சங்கரனால் நிறுவப்பட்ட மூல மடம் என்ற கதையை புணைந்து கட்டுக்கதைகளை கூறி உலகோரை நம்பவைத்தது.

இராமேசுவரம் கோயிலானது சிருங்கேரி மடத்தின் கீழ் உள்ள கோயில், சற்று விளக்கமாக சொல்லவேண்டுமெனில் ஆதி சங்கரன் வாழ்ந்த காலத்தில் தன்னுடைய அருளாற்றலால் சில கோயில்களை தன் கட்டுக்குள் வைத்திருந்தார். அந்த கோயில்களை தான் நிறுவிய 4 நான்கு மடங்களுக்கு ஒப்படைத்து அதனை பராமரிக்கும்படி ஆணையிட்டுள்ளார். அதன்படியே சிருங்கேரி மடத்துக்கு உரியதாக திருச்சி திருவானைக்காவல் அகிலாண்டேசுவரி கோயிலும் இராமேசுவரம் சிவன் கோயிலும், காஞ்சி காமாட்சி அம்மன் கோயில்  அவற்றுள் சில.

விஜயேந்திரன் இராமேசுவரம் கோயில் கருவறைக்குச் செல்ல தடை செய்ய முயன்ற அக்கோயில் குருக்கள் ஆகம விதிகளின் படி சந்நியாசி செல்லக்கூடாது என்றும் கெஞ்சியுள்ளார் அதனையும் மீறி கோயில் அதிகாரிகளின் ஆதரவோடு கருவறைக்குள் நுழைந்துள்ளார், சங்கர ராமன் கொலை வழக்கில் கைதாகி  ஜாமீனில் வெளி வந்த ஜெயேந்திரன் இதே இராமேசுவரம் கோயிலில் நுழைய முற்பட்டு சிருங்கேரி மடத்தினரால் நியமிக்கப்பட்ட மராத்திய குருக்கள்கள் அனுமதி மறுத்துள்ளனர்.

 1. தஞ்சைப் பெரிய கோயில் குடமுழுக்கு தமிழில் நடத்தப்படவேண்டும் என்றும் தமிழ் நாட்டு கோயில்களுக்கு தமிழ் மொழியில்தான் குடமுழுக்கு நடத்தபடவேண்டும் என்று போராட்டம் நடந்த போது ஆகம் விதியை மீறக்கூடாது என்று வாதிட்டவர்கள் இங்கு காணாமல் போனது ஏனோ???
 2. ஆகம விதிகளின்படிதான் கோயில் குடமுழுக்கு நடத்தப்படவேண்டும் என்று கூக்குரல் இட்ட கும்பல் ஒன்று கூட விஜயேந்திரனின் ஆகம விதி மீறலை கேள்வி கேட்கவில்லையே அது ஏனோ?
 3. தமிழில் குடமுழுக்கு நடத்தப்படவேண்டும் என்ற போது ஆகமத்தை மீறுவது என்று பாவம் என்று கூறியவர்கள் இன்று சவம் போல் வாயடைத்து போனது ஏனோ?
 4. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்றவுடன் ஆகம விதிகளின் படி அது செல்லாது என்று நீதி மன்றம் வரை போர்க்கொடி தூக்கியவர்கள் இன்று இந்த காஞ்சி மட பாவிகளின் செயலை கண்டு கொதிக்காதது ஏனோ???
 5. ஆகம விதியை மீறிய விஜயேந்திரனுக்கு எதிராக ஹிந்து அமைப்புக்கள் ஏன் போர் கொடியோ அல்லது கண்டனமோ தெரிவிக்கவில்லை???
 6. ஆகம விதியை மீறிய விஜயேந்திரனை கண்டிக்கும் விதமாக எந்த ஒரு தொலைக்காட்சியும் காஞ்சி மடத்தின் வரலாற்றினை பற்றிய பரபரப்பான நிகழ்ச்சினை ஒளிபரப்பவில்லையே??
 7. இராமாயணத்தில் இராவணனை கொன்ற இராமன் இராமேசுவரத்தில் சிவ பூசை செய்து பாவத்தை போக்கிக்கொண்டார் என்பது போன்று சங்கரராமன் கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்த ஜெயேந்திரன்(2005ல்) செய்த கொலைக்கு தானும் கருவறைக்கு சென்று வணங்கவேண்டும் என்று முயற்சித்த நிகழ்ச்சியை உற்று நோக்குகையில் விஜயேந்திரன் யாரையாவது அதுவும் குறிப்பாக பிறாமணனை கொன்றுவிட்டாரா என்று ஐயம் எழவில்லையா????
 8. ஒரு கோயிலின் ஆகம விதியை மீறச்சொல்லி இந்து அறநிலையத்துறைக்கு அதிகாரம் இல்லை இருந்தும் விஜயேந்திரன் கருவறைக்குள் அனுமதிக்க அற நிலையத்துறையினர் கோயில் குருக்கள்களை மிரட்டியுள்ளனர், இந்து அறநிலையத்துறையினரிடமிருந்து கோயில்களை காப்பாற்றத்துடிக்கு ஜக்கி வாசுதேவும் இப்பிறர்சினையை மேற்கோள் காட்டிஅறநிலையத்துறை தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்து ஆகம விதிகளை மீறிவிட்டது என்று கோரிக்கை விடுக்கவில்லை –

மேற்கூறிய கேள்விகள் இருக்க, காவி அணிந்து துறவரம் பூண்டவர்கள் மடாதிபதியாகவே இருந்தாலும் அவர்களால் கருவறைக்குள் சென்று பூசைகள் செய்ய முடியாது என்பதனை நாம் திருப்பனந்தாள் மடம் போன்ற தமிழ் பாரம்பரிய மடங்கள் எதுவாயினும் அம்மடத்து மடாதிபதிகள் கருவறைக்கு வெளியே நிற்க கோயில் குருக்கள்கள் தீப ஆராதனை செய்வர். அது மட்டுமல்லாமல் இந்த பிறாமண சந்நியாசிகள் யார் வீட்டிற்கும் செல்லக்கூடாது என்ற விதியும் உண்டு ஆனால் அவர்கள் வீட்டில் அக்னி ஹோத்திரம் செய்யப்படும் காலங்களிலும் ஆடுகளை வெட்டி யாகம் நடத்தப்படும் போதும் மட்டும் இந்தத்துறவிகள் இல்லங்களுக்குச் சென்று வணங்கி வரலாம் என்ற விதிவிலக்கு உண்டு.

 1. ஆகம விதிகளின் படியும், சந்நியாச தர்மத்தின் படியும் கோயில் கருவறைக்குச் செல்லக்கூடாது என்ற விதியை மதிக்காதவர்களா ஹிந்து மத தர்மத்தை காப்பவன் என்ற பெயரோடு ஜகத்குரு( சகடம் , சக்கரம் போல் சுற்றுதல் என்ற தமிழ் சொல்லையே ஜகத் என்று திருடப்பட்டது) என்ற பெயருடன் திரிவது சரியா?
 2. பழையன அனைத்தும் வேண்டும் என்று கூறி அதனை காக்கும் சனாதன காப்பாளர் என்று வாழும் இவர்கள் ஆகம விதிகளை மீறவது அதர்மம் ஆகாதா?
 3. சிருங்கேரி மடத்தின் கீழ் உருவான இந்த கும்பகோண மடம் தன்னை வளர்த்தவனை முதுகில் குத்தி தன் முன்னோர்களை ஏமாற்றியவர்கள் இப்படிப்பட்ட துரோகிகளை மக்கள் ஆதரிக்கலாமா??
 4. அன்று ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் திப்பு சுல்தானின் நண்பர்களாக இருந்த சிருங்கேரி மடத்தை விரோதியாக பார்த்தனர் அந்த வாய்ப்பை பயன்படுத்தியே கும்பகோண மடம் காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலை ஆங்கிலேயர்களின் உதவியோடு காஞ்சி மடமாயிற்று. இன்று அதே அரசியல் வலிமையை வைத்தே இராமேசுவரம் கோயிலையும் கைப்பற்ற துடிக்கும் குருதுரோகி காஞ்சி மடம்

தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய சித்தரின் பேரனும் 12வது பதினெண் சித்தர் பீடாதிபதியுமாகிய குருமகா சன்னிதானம் ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்கள் துறவி நிலை இந்து சமயத்திற்கு உரிய ஒன்றா என்ற கேள்விக்கு பதிலாக கீழே உள்ள பத்தியை வழங்கினார்

துறவி நிலை இந்து சமயத்திற்கு உரிய ஒன்றா?

”துறவி நிலை இந்து சமயத்திற்குரிய ஒன்றல்ல. இந்து சமயத்தை இம்மண்ணுலகுக்கு வழங்கிய பதினெண் சித்தர்கள் யாரும் துறவியாக இருக்கவில்லை. அவர்கள் படைத்த கடவுள்கள் (48 வகையினர்) யாரும் துறவிகளாக இல்லை. இந்து மதத்துக்குரிய தலைவர்களை ‘விந்து வழி வாரிசு’, ‘குருவழி வாரிசு’ என்று பிரிக்கின்ற காரணத்தினால் திருமணம் செய்து கொண்டு வாழ்வது இன்றியமையாதது. இல்லறமே நல்லறம் என்று பதினெண் சித்தர்களால் வலியுறுத்தப்படுகின்றது. மேலும் துறவு நிலை என்பது நாட்டில் வாழும் மனிதர்களுக்கு உரிய ஒன்றல்ல.

‘பெண்ணை, மண்ணை, பொன்னை வெறுப்பது மாபாவம்’ என்று குருபாரம்பரியம் குறிக்கின்றது. பெண்ணை வெறுத்தலும், காவி கட்டுதலும் இந்து மதத்திற்கு உரிய ஒன்றல்ல, அப்படி வெறுத்து வாழ்பவர்கள் மதத் தலைவர்களாக இருப்பதற்கோ, அருள்வழங்குவதற்கோ தகுதியற்றவர்கள். காட்டில் வாழும் கொடிய விலங்குகளோடு வாழவே தகுதியானவர்கள்.”

”இந்துக்கள் கோயில்களில், பூசைகளில் சமசுகிருதத்தைப் பயன்படுத்துவது பெரிய பாவம், கொடிய தீட்டு, நெடிய சாபம்” – தஞ்சைப் பெரிய கோயிலை கட்டிய சித்தரின் குருபாரம்பரிய வாசகம்

விஜயேந்திரனின் ஆகம மீறல் பற்றிய முழுமையான கட்டுரையை படிக்க

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.